Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் - தோனி பதவி விலகல் எதிரொலி.. சிஎஸ்கே சந்திக்கப்போகும் பிரச்சினை.. கோடிகளை இழக்கும் அபாயம்

சென்னை: ஐபிஎல் வரலாற்றிலேய மிகவும் பிரபலமான அணி, அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.

Recommended Video

IPL 2022: Dhoni Steps Down as CSK Captain, Jadeja to lead | OneIndia Tamil

சிஎஸ்கே அணியின் அடையாளமாக திகழ்ந்தவர் தோனி தான். சென்னைக்காக விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் தோனி தான் கேப்டன்.

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியில் தோனி இதுவரை சாதாரண வீரராக களமிறங்கியதே இல்லை. காயம் காரணமாக அவர் விளையாடவில்லை என்றால் தான் வேறு கேப்டன் களமிறங்குவார்.

தோனி என்ற ஆலமரம்

தோனி என்ற ஆலமரம்

தோனியின் பேட்டிங் திறன் பாதிக்கப்பட்டாலும் சரி, தோனி தலையிலிருந்து கேப்டன் என்ற கிரிடம் இறங்கியது இல்லை. தற்போது தோனியின் இந்த முடிவால் சிஎஸ்கே கிரிக்கெட் களத்திலும் சரி, வியாபார ரீதியாகவும் சரி பெரும் இழப்பை சந்திக்கப் போவது உறுதி. ஒரு ஆலமரம் விழுந்த இடத்தில் இன்னொரு ஆலமரம் உடனே வளருமா என்ன? அப்படி தான் இனி சிஎஸ்கே அணியும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தோனிக்கு இருக்கும் கிரிக்கெட் அறிவு, நுட்பம் தான் சென்னை அணி 4 கோப்பையை வென்றதற்கான காரணம். இந்த நுட்பம் எல்லாம் நாமே கற்க வேண்டும். பிறர் கற்று கொடுத்தாலும் வராது. டி20 போட்டியில் சூழலுக்கு ஏற்ப கேப்டன்கள் செயல்பட வேண்டும். அதில் தோனி வல்லவர். தற்போது அதே போல் ஜடேஜா செயல்படுவார் என்பது எதிர்பார்ப்பது மிகவும் தவறு.

பந்தயத்திலிருந்து விலகல்

பந்தயத்திலிருந்து விலகல்

கேப்டனாக கற்று கொள்ள ஜடேஜாவுக்கு சில போட்டிகள் தேவைப்படலாம். ஆனால் அதற்குள் தொடரே முடிந்துவிடும். கேப்டன் எடுக்கும் ஒரு தவறான முடிவு போட்டியின் முடிவையே மாற்றக் கூடும். இதனால் ஜடேஜா தவறிலிருந்து தான் கற்க வேண்டும். தோனியின் இந்த விலகல், கோப்பையை வெல்வதற்கான பந்தயத்திலிருந்து சிஎஸ்கேவும் விலகிவிட்டது என்றே அர்த்தம்.

கோடிகளை இழக்கும் அபாயம்?

கோடிகளை இழக்கும் அபாயம்?

சிஎஸ்கேவின் வர்த்தகமும் தோனி என்ற காந்த சக்தியால் தான் இயங்கி வந்தது. சிஎஸ்கே கோப்பையை வென்றாலும், தோற்றாலும் சிஎஸ்கே வின் Brand value என்றும் குறைந்தது இல்லை. இதன் காரணமாக தான் தோனி இருக்கும் வரை அவர் தான் கேப்டன் என்று சிஎஸ்கே நிர்வாகமும் கூறி வந்தது. தற்போது தோனியின் ராஜினாமா முடிவால் சிஎஸ்கேவின் சந்தை மதிப்பு பயங்கரமாக அடி வாங்கும்.

Story first published: Thursday, March 24, 2022, 16:12 [IST]
Other articles published on Mar 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+