Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடருக்கு தோனி முழுக்கு? CSK கேப்டன் பதவியிலிருந்து விலக இதுதான் காரணமா? ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி திடீரென்று விலகியதற்கான காரணம் வெளிவந்துள்ளது.

Recommended Video

IPL 2022: Dhoni Steps Down as CSK Captain, Jadeja to lead | OneIndia Tamil

ஐபிஎல் 15வது சீசன் தொடக்கப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது.

இந்தப் போட்டி தொடங்க இன்னும் 48 மணி நேரம் கூட இல்லாத நிலையில், தோனி இப்படி ஒரு முடிவை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.

வயது காரணம்

வயது காரணம்

தோனிக்கு தற்போது 40 வயதாகிறது. அடுத்த சீசனில் அவருக்கு வயது 41 ஆகி விடும். ஏற்கனவே கடந்த சீசனில் தோனி வெறும் விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் தான் அணியை வழிநடத்தினார். ஐபிஎல் வீரர்கள் தக்க வைக்கப்படும் போதே தோனி தனது ஊதியத்தை 12 கோடியாக குறைத்து கொண்டு ஜடேஜாவுக்கு 16 கோடி ரூபாயாக வழங்கினார்.

பேட்டிங் திறன்

பேட்டிங் திறன்

அப்போதே ஜடேஜா தான் அடுத்த கேப்டன் என்று சிஎஸ்கே வட்டாரத்தில் செய்திகள் வெளியாகின. இது குறித்து மைக்கேல் தமிழ் இணையத்தளத்தில் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். தற்போது அதன்படியே தோனியும் கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டார். இதற்கு காரணம், தோனியின் பேட்டிங் திறன் வயதாகிவிட்டதால் முன்பு போல் செயல்பட முடியவில்லை.

பேட்ஸ்மேனாக தோனி

பேட்ஸ்மேனாக தோனி

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி 16 போட்டிகளில் விளையாடி 114 ரன்களை மட்டுமே அடித்தார். இதனால் இம்முறை பேட்ஸ்மேனாக சிறப்பாக ரன் குவிக்க வேண்டும் என்பதற்காகவே தோனி பல்வேறு பயிற்சியில் ஈடுபட்டார். கேப்டன் பதவி, விக்கெட் கீப்பிங்கில் கவனம் தோனியின் பேட்டிங்கை பதம் பார்த்தது. இதனால் பேட்ஸ்மேனாக தாக்கத்தை ஏற்படுத்த தோனி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.

அடுத்த ஆண்டு?

அடுத்த ஆண்டு?

தோனியின் உடல் தகுதி சிறப்பாக இருந்தால், அவர் அடுத்த ஆண்டு விளையாடலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் தான் தாம் இருக்கும் போதே அடுத்த கேப்டனை தயார் செய்துவிட்டு சென்று விட வேண்டும் என்ற யோசனையில் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். தோனியின் இந்த முடிவுக்கு ஸ்ரீனிவாசன் முதலில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Story first published: Thursday, March 24, 2022, 15:53 [IST]
Other articles published on Mar 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+