Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘தல’ தோனிக்கு தலைகனம் அதிகம் !!.. பயிற்சியாளர் முன்வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு.. வெளிவந்த உண்மை!

மும்பை: ஒரு கேப்டனாக தோனி தனக்கு கசப்பான அனுபவத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் சிறந்த கேப்டனாக திகழ்ந்து வந்த தோனியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி, ரவீந்திர ஜடேஜாவை புதிய கேப்டனாக அறிவித்தார்.

தோனி மீது குற்றச்சாட்டு

தோனி மீது குற்றச்சாட்டு

ஒரு கேப்டனாக தோனி மோசமாக செயல்பட்டார் என எந்தவொரு அணி வீரரும் கூறியதை பார்த்திருக்க முடியாது. இன்றும் பல முன்னணி வீரர்கள் தோனிக்கு கீழ் விளையாட வேண்டும் என்று தான் ஆசை தெரிவித்து வருகின்றனர். பயிற்சியாளர்களுக்கும் அவர் ஒரு கூல் கேப்டன் தான். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் தோனி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எப்போது நடந்தது

எப்போது நடந்தது

2016ல் இருந்து சிஎஸ்கே அணி 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட போது, தோனி புனே அணியை வழிநடத்தினார். இந்தியாவில் விளையாட்டுத்துறையின் முதல் புள்ளிவிவர வல்லுநரான பிரசன்னா அகோரம், புனே அணியின் செயல்பாட்டு பயிற்சியாளராக செயல்பட்டார். அவர் தான் தோனி கடுமையாக நடந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

என்னதான் நடந்தது

என்னதான் நடந்தது

இதுகுறித்து பேசிய அவர், தோனியுடன் மகிழ்ச்சியுடன் பணியாற்ற சென்றேன்.

முதல் நாள் நாங்கள் சந்தித்த போது, அவர் என்னிடம் காபி வேண்டுமா எனக்கேட்டு, என்னுடன் அமர்ந்து பேசினார். ஆனால் அதன் பின்னர் தான் சரியில்லை. என்னிடம் அவர், " உங்களுக்கு நிறைய அனுபவங்கள் இருக்கலாம், ஸ்டீஃபன் ப்ளெம்மிங் உங்களை நியமித்திருக்கலாம். உங்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி தான். ஆனால் எனக்கு தேவையில்லை.

எனக்கு எதுவும் தேவையில்லை

எனக்கு எதுவும் தேவையில்லை

உங்களின் ஆலோசனைகள், வியூகங்கள் அனைத்தையும் பயிற்சியாளர் மற்றும் வீரர்களிடம் பகிருங்கள். மீட்டிங் நடத்தி முடியுங்கள். ஆனால் அங்கு என்னால் வர முடியாது. என்னை எதிர்பார்க்காதீர்கள். எனக்கு எந்தவித அட்வைஸும் நீங்கள் கொடுக்க தேவையில்லை. நானாக ஏதாவது கேட்டால் மட்டும் கூறுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என தோனி கடுமையாக பேசியதாக பிரசன்னா குற்றம்சாட்டியுள்ளார்.

குவியுமா குற்றச்சாட்டுக்கள்

குவியுமா குற்றச்சாட்டுக்கள்

தோனி மிகவும் நிதானமாக நடந்துக்கொள்பவர், அனைவரிடமும் மிக எளிமையாக பழகுபவர் என்ற பெருமைகள் உள்ளன. ஆனால் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியவுடன் பயிற்சியாளர் ஒருவர் தோனி குறித்து இப்படி கூறியிருப்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. இனி வரும் நாட்களில் தோனி குறித்த உண்மைகள் வெளிவருமா என்றும் எதிர்பார்க்கவைத்துள்ளது.

Story first published: Friday, March 25, 2022, 19:47 [IST]
Other articles published on Mar 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+