Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியிடம் இருந்து கற்ற அந்த ஒரு விஷயம்.. கேப்டன்சிக்கு தேவையான ஒன்று.. டூப்ளசிஸ் நெகிழ்ச்சி பதிவு!!

மும்பை: கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியது குறித்து டூப்ளசிஸ் உருக்கமான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் குடும்பத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தவர் தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டூப்ளசிஸ்.

கடந்த சில ஆண்டுகளாக தோனிக்கு கீழ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர், இந்தாண்டு தக்கவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கேப்டன்சி மாற்றங்கள்

கேப்டன்சி மாற்றங்கள்

மெகா ஏலத்தில் அவரை ஏலம் எடுக்க, ரசிகர்கள் பல முறை கோரியும், பட்ஜெட் காரணமாக வாங்காமல் விட்டுவிட்டது. இதனையடுத்து தற்போது அவர் ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டு, கேப்டனாகவும் பதவியேற்றுள்ளார். ஒருபுறம் டூப்ளசிஸின் கேப்டன்சியில் கோலி, மற்றொரு புறம் ஜடேஜாவின் கேப்டன்சியில் தோனி என்ற சூழல் உருவாகியுள்ளது.

டூப்ளசிஸ் உருக்கம்

டூப்ளசிஸ் உருக்கம்

இந்நிலையில் தோனியின் கேப்டன்சி குறித்து டூப்ளசிஸ் பேசியுள்ளார். அதில், பல சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளேன் என்ற பெருமை என்னிடம் உள்ளது. கிரீம் ஸ்மித்திற்கு கீழ் முதலில் விளையாடினேன். அதன்பின்னர் சென்னை வந்த பின்னர், தோனிக்கு கீழ் விளையாட தொடங்கினேன். அவரின் கேப்டன்சியில் நீண்ட காலம் விளையாடியது எனது அதிர்ஷ்டம்.

தோனியிடம் இருந்து கற்றது

தோனியிடம் இருந்து கற்றது

களத்தில் தோனி முடிவு எடுக்கும் போதெல்லாம், அவரின் மூளை எப்படி செயல்படுகிறது என மிக அருகில் இருந்து பார்த்தவன் நான். என்னுடைய கிரிக்கெட் வாழ்கைக்கு அது மிக முக்கியமான ஒன்று. ஒவ்வொரு கேப்டனுக்கும் தனித் தனி பலம் உண்டு. எனினும் மற்ற சிறந்த தலைவர்களின் வழிகளையும் நான் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்தவகையில் தோனி எனக்கு முக்கியம் தான் எனக்கூறியுள்ளார்.

ஆர்சிபி ப்ளான்

ஆர்சிபி ப்ளான்

விராட் கோலியின் கேப்டன்சியில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி, டூப்ளசிஸை கேப்டனாக நியமிக்க முக்கிய காரணம், அவருக்கு தோனியின் வியூகங்கள் தெரியும் என்பதால் தான். இக்கட்டான சூழல்களில் சரியான முடிவுகளை எடுப்பதை தோனியிடம் இருந்து அறிந்து வைத்துள்ளார்.

Story first published: Friday, March 25, 2022, 17:54 [IST]
Other articles published on Mar 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+