
மும்பை அணி மாற்றம்
முதல் 5 போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்திருந்த மும்பை அணி, இந்த முறை அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இந்த போட்டியிலாவது வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரி வந்தனர். ஆனால் அனைத்திற்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

என்ன காரணம்
அர்ஜுனுக்கு வாய்ப்பு தராமல் மீண்டும் பழைய அணியே விளையாடும் என்பது போல தெரிவித்துவிட்டார். இடதுகை வேகப்பந்துவிச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கருக்கு உள்நாட்டு தொடரில் பெரியளவில் அனுபவம் இல்லை என்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனினும் அவரை ஒருமுறையாவது பயன்படுத்தலாமே என்பது தான் ரசிகர்களின் கோபம். சச்சினே இதற்கு அதிருப்தியில் இருப்பதாக தான் தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ அணி மாற்றம்
லக்னோ அணியை பொறுத்தவரை முக்கிய மாற்றம் ஒன்றை செய்துள்ளனர். கிருஷ்ணப்பா கௌதமை நீக்கிவிட்டு, மணிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மணிஷ் பாண்டே முதல் சில போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே வெளியேற்றப்பட்டார். தற்போது நல்ல கம்பேக் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளேயிங் 11 விவரம்
மும்பை இந்தியன்ஸ் : ரோகித் சர்மா, இஷான் கிஷான், டெவாட் பிரேவிஸ்,திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கெயீரன் பொல்லார்ட், ஃபெபியன் ஆலன், ஜெய்தேவ் உனத்கட், முருகன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ்
லக்னோ அணி : கே.எல்.ராகுல், குயிண்டன் டிகாக், மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஸ் பதோனி, ஜேசன் ஹோல்டர், க்ருணால் பாண்ட்யா, துஷ்மந்தா சமீரா, ஆவேஷ் கான், ரவி பிஷ்னாய்


Click it and Unblock the Notifications