For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3வது நடுவரான சச்சின் டெண்டுல்கர்.. ஒரு நிமிடத்தில் ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்.. ஐபிஎல் -ல் சுவாரஸ்யம்!

மும்பை: ஐபிஎல் தொடரில் திடீரென 3வது நடுவராக சச்சின் டெண்டுல்கர் செயல்பட்டது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

16வது லீக் போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பான பேட்டிங்கால் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 189 ரன்களை சேர்த்தது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

ஓப்பனிங்கில் கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்களுக்கு வெளியேற, முதல் விக்கெட்டிற்கு வந்த பேர்ஸ்டோ 8 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் (35) லியாம் லிவிங்ஸ்டன் ( 64 ) என சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். பின்னர் விக்கெட்கள் மலமலவென விழ அந்த அணி 189 ரன்களை குவித்தது.

சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

இந்நிலையில் இந்தப்போட்டியின் போது ஒரே ஒரு குரல் மட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுவும் சச்சின் டெண்டுல்கர் மைக்கில் பேசுவது போன்று. ஆட்டத்தின் கடைசி ஓவரின் போது ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை அர்ஷ்தீப் சிங் மிட் விக்கெட் திசையில் அடித்துவிட்டு வேகமாக ரன் எடுக்க ஓடினார். 2வது ரன் எடுப்பது ரிஸ்க் எனத்தெரிந்தும் துணிந்துச்சென்றார், அப்போது விக்கெட் கீப்பர் பந்தை தவறவிட்டதால் மூன்றாவது பந்திற்கான ஓட்டமும் நடந்தது.

3வது நடுவர் தீர்ப்பு

3வது நடுவர் தீர்ப்பு

இந்த முறை நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஹர்திக் பாண்ட்யாவிடம் சென்றது. ஆனால் பாண்ட்யா பந்தை வைத்து ஸ்டம்பை அடிப்பதற்கு முன்னதாக, தனது கால்களால் ஸ்டம்பை தொட்டுவிட்டார். இதனால் கடைசி நேரத்தில் 3 ரன்கள் தேவையின்றி கசிந்தது. எனினும் இதனை சரிபார்க்க 3வது நடுவருக்கு அனுப்பப்பட்டது.

சச்சினின் குரல்

சச்சினின் குரல்

அப்போது, "நான் நன்கு ஆராய்ந்துவிட்டேன், எனது முடிவை அறிவிக்கவுள்ளேன் என ஒரு குரல் வந்தது" அதனை கேட்பதற்கு சச்சின் டெண்டுல்கரின் குரல் போன்றே இருந்தது. சச்சின் மூன்றாவது நடுவராக செயல்படுகிறாரா என மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஒருநிமிடம் ஆச்சரியமாக பார்த்து வந்தனர்.

உறுதி செய்யப்பட்டதா?

இறுதியில் 3வது நடுவரின் பெயர் பாஷ்சிம் பதாக் என டிஜிட்டல் திரையில் காண்பிக்கப்பட்டது. இதன் பின்னர் தான் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். எனினும் சச்சினின் குரல் மற்றும் 3வது நடுவரின் குரலை ஒப்பிட்டு இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Story first published: Friday, April 8, 2022, 22:48 [IST]
Other articles published on Apr 8, 2022
English summary
Sachin tendulkar 3rd umpire ( 3வது நடுவராக சச்சின் டெண்டுல்கர் ) ஐபிஎல் தொடரில் குஜராத் - பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 3வது நடுவராக செயல்பட்டதான ஆடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+