Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் இறுதி போட்டி நேரம் மாற்றம்.. பிசிசிஐ முடிவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு.. சிவராத்தரி தான் இனி

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்று வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி வரும் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது.

Recommended Video

IPL 2022 Final Match! BCCI எடுத்த திடீர் முடிவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு | #Cricket

இந்த இறுதி போட்டியை பிரம்மாண்டமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஒரு லட்சத்தி 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

நேரம் மாற்றம்

நேரம் மாற்றம்

இதற்கான பிரபல இசை அமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் போட்டிகள் நேரத்தை மாற்ற பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. பழையபடியே போட்டியை அடுத்த ஆண்டு முதல் இரவு 8 மணிக்கு நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இரவு 8 மணி

இரவு 8 மணி

இதற்கு முதல் படியாக, நடப்பு சீசனின் இறுதிப் போட்டியை இரவு 8 மணிக்கு நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. பிசிசிஐயின் இந்த முடிவு ஸ்டார் நிறுவனத்தையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே டைம் அவுட், அது, இது என மூன்றரை மணி நேரத்தில் முடிவடைய வேண்டிய போட்டி நான்கரை மணி நேரம் வரை நடைபெறுகிறது.

ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

தற்போட்டி போட்டி 8 மணிக்கு தொடங்கம் என்றால், ஆட்டம் முடிய 12.30 மணிக்கு மேல் ஆகும் என்று ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்த நாள் பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு செல்பவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால் போட்டியை 7 மணிக்கே தொடங்கி பத்தரை மணிக்கு எல்லாம் முடித்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டார் நிறுவனம் கவலை

ஸ்டார் நிறுவனம் கவலை

இதே போன்று போட்டி பத்தரை மணியை தாண்டினாலே பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. தற்போது பிசிசிஐயின் இந்த நடவடிக்கை மூலம் டிஆர்பி கடுமையாக சரிய வாய்ப்புள்ளது என்றும், விளம்பரங்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளது. இதே போன்று அடுத்த ஆண்டு முதல் டபுள் ஹெட்டர்ஸ் எண்ணிக்கையை குறைப்பது என்றும், போட்டி 3.30 மணிக்கு பதில் 4 மணிக்கு தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

Story first published: Thursday, May 19, 2022, 19:39 [IST]
Other articles published on May 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+