Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நொடியில் மாறிய ரியாக்‌ஷன்.. லக்னோவின் பரிதாப தோல்வி.. கம்பீரின் அல்டிமேட் புகைப்படங்கள்!

கொல்கத்தா: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது லக்னோ அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் காட்டிய ரியாக்‌ஷன்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ பரிதாபமாக தோற்றது.

முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 207 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 193 ரன்களை மட்டுமே அடித்து நாக் அவுட்டானது.

லக்னோவின் தோல்வி

லக்னோவின் தோல்வி

கே.எல்.ராகுல் களத்தில் இருந்தவரை 19 ஓவரின் போது கூட வெற்றி பெற்றுவிடும் என லக்னோ அணி நினைத்தது. ஆனால் கடைசி நேரத்தில் தோற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது லக்னோ அணி கவலைப்பட்டதை விட, ஆலோகர் கவுதம் கம்பீர் வருத்தப்பட்ட வீடியோக்கள் தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கம்பீர் ரியாக்‌ஷன்

கம்பீர் ரியாக்‌ஷன்

ஆட்டத்தின் 15வது ஓவரின் போது, ஒரு திருப்புமுணை ஏற்படவிருந்தது. மோஷின் கான் வீசிய 5வது பந்தை தினேஷ் கார்த்திக் தூக்கி அடிக்க முயன்றார். மிகவும் முக்கியமான இந்த கேட்ச்-ஐ கே.எல்.ராகுல் டைவ் அடித்து பிடித்தார். இதனால் டக் அவுட்டில் இருந்த கவுதம் கம்பீர் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்.

கடைசியில் ட்விஸ்ட்

ஆனால் அதன்பின்னர் தான் ட்விஸ்டே இருந்தது. டைவின் போது, கீழே விழுந்ததால் கே.எல்.ராகுலின் கையில் இருந்து கேட்ச் தவறியது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்த கவுதம் கம்பீர் அப்படியே ரியாக்‌ஷனை மாற்றி சோகமானார். கே.எல்.ராகுலின் இந்த தவறால், தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்களை குவித்தார்.

கம்பீரின் ரியாக்‌ஷன்

கம்பீரின் ரியாக்‌ஷன்

இதே போல ஆட்டம் முடிந்த பிறகும் கம்பீர் ஒரு தரமான ரியாக்‌ஷன் கொடுத்தார். ஜெயிக்க வேண்டிய போட்டியில் லக்னோ தோற்றுவிட்டதால், கே.எல்.ராகுலை பார்த்து கவுதம் கம்பீர் முறைத்தார். ராகுல் அதற்கு தலைகுணிந்து நின்றார். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக வருகிறது.

Story first published: Thursday, May 26, 2022, 15:11 [IST]
Other articles published on May 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+