For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது வேற லெவல் மரியாதை.. சச்சின் காலில் விழுந்த வெளிநாட்டு வீரர்.. மைதானத்தில் நடந்த சுவாரஸ்யம்

புனே: ஐபிஎல் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர் ஒருவர் திடீரென்று மைதானத்தில் காலில் விழுந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது பலரும் அறிந்ததே. சச்சினை பார்த்து கிரிக்கெட் வீரர்கள் ஆனதும் பலர்.

இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை வென்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையும் சச்சினுக்கே உரியது.

மரியாதை

மரியாதை

தற்போது கிரிக்கெட்டிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றுவிட்டாலும் இன்றும் பலரும் அவரை கொண்டாடி வருகின்றனர். பொதுவாக பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது, மரியாதை செலுத்துவது இந்தியர்களின் வழக்கம். ஆனால் அது மெல்ல மெல்ல, நமக்கு பிடித்த ஹீரோ, கிரிக்கெட் வீரர்கள் காலில் விழுவது என அன்பை வெளிப்படுத்தும் விதமாக மாறிவிட்டது.

ரசிகர்கள் அன்பு

ரசிகர்கள் அன்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் காலில் ரசிகர்கள் விழுந்து மரியாதை செலுத்தியதை நாம் பார்ததிருப்போம். ஆனால் ஒரு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர், சக வீரரின் காலில் விழுந்து பார்த்து இருப்போமா. அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று நடந்தது.

மைதானத்தில் சச்சின்

மைதானத்தில் சச்சின்

நேற்று புனேவில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரானஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. இதனால் சச்சின் ரசிகர்கள் மனவேதனையில் இருந்தனர். அப்போது போட்டி முடிந்ததும், எதிரணி வீரர்கள் வெற்றி பெற்ற அணிக்கு வரிசையில் வந்து கைகுலுக்கி சென்றனர். இந்த வரிசையில் மும்பை அணியின் மெண்டராக உள்ள சச்சினும் இருந்து பஞ்சாப் வீரர்களை பாராட்டினார்.

காலில் விழுந்த வீரர்

காலில் விழுந்த வீரர்

அப்போது திடீரென்று பஞ்சாப் அணியின் ஃபில்டிங் பயிற்சியாளரான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரூட்ஸ் திடீரென்று சச்சின் காலில் விழ சென்றார். இதனை கொஞ்சமும் கூட எதிர்பார்க்காத சச்சின், காலில் விழ வேண்டாம் என்று எவ்வளவும் தடுத்தார். ஆனால் ரூட்ஸ் சச்சினின் காலை தொட்டு, பின்னர் இருவரும் கட்டி அணைத்து கொண்டனர். இது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

Story first published: Thursday, April 14, 2022, 18:01 [IST]
Other articles published on Apr 14, 2022
English summary
IPL 2022- Great traditional gesture by Jhonty Rhodes for Sachin tendulkar சச்சின் காலில் விழுந்த வெளிநாட்டு வீரர்.. மைதானத்தில் நடந்த சுவாரஸ்யம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+