Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதுதாங்க தாங்கவே முடியல.. க்ருணாலை சீண்டிப்பார்த்த ஹர்திக் பாண்ட்யா.. போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!!

மும்பை: குஜராத் அணி வெற்றி பெற்ற போதும், ஒரு விஷயம் தாங்கிக்கொள்ள முடியவில்லை என ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி அசத்தியது.

முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 158 / 6 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் விளையாடிய குஜராத் அணி 19.4 ஓவர்களில் 161 / 5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சுவாரஸ்ய நிகழ்வுகள்

சுவாரஸ்ய நிகழ்வுகள்

இரு புதிய அணிகள் மோதிக்கொண்டது என்பதை விட, பல சுவாரஸ்ய விஷயங்கள் இப்போட்டியில் அரங்கேறினர். பரம எதிரிகளாக பார்க்கப்பட்ட க்ருணால் பாண்ட்யா மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவருமே லக்னோ அணியில் விளையாடுகின்றனர். நேற்று ஹூடா ரன் வேட்டை நடத்திய போது, டக்கவுட்டில் அமர்ந்திருந்த க்ருணால் பாண்ட்யா கைத்தட்டி உற்சாகப்படுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சகோதரர்கள் சண்டை

சகோதரர்கள் சண்டை

இதே போல இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணியிலும், க்ருணால் பாண்ட்யா லக்னோ அணியிலும் மோதினர். 33 ரன்கள் எடுத்து அச்சுறுத்தல் தந்த ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட்டை அவரது சகோதரர் தான் கைப்பற்றினார். எனினும் அவர் எந்தவொரு கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை.

ஹர்திக்கின் பேச்சு

ஹர்திக்கின் பேச்சு

இந்நிலையில் இதுகுறித்து ஹர்திக் பாண்ட்யா நேற்று பேசினார். அதில், க்ருணால் பாண்ட்யாவிடம் விக்கெட் ஆனது தான் கொஞ்சம் வலிக்கிறது. நாங்கள் போட்டியில் தோற்றிருந்தால் கூட இந்த இந்த அளவிற்கு என்னை பாதித்திருக்காது. எனினும் அவர் என் விக்கெட்டை எடுத்தார், நாங்கள் வெற்றி பெற்றோம். எல்லாம் சரிக்கு சமமாக முடிந்தது என வேடிக்கையாக பேசினார்.

 வெற்றிக்கான காரணம்

வெற்றிக்கான காரணம்

தொடர்ந்து வெற்றி குறித்து பேசிய அவர், இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளோம். முகமது ஷமி எங்களுக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். நான் முன்கூட்டியே களமிறங்கி விளையாடினேன். ஏனென்றால் அப்போது தான் மற்ற வீரர்கள் பிரஷர் இன்றி விளையாடுவார்கள் என நினைத்தேன். அது சரியாக அமைந்தது.

Story first published: Tuesday, March 29, 2022, 11:31 [IST]
Other articles published on Mar 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+