Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்ணாயிரம் அந்த கால்குலேட்டர எடு.. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? ஒரு அலசல்

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற அணி, அதிக முறை இறதிப் போட்டிக்கு சென்ற அணி என்ற பெருமையை பெற்றது சிஎஸ்கே அணி.

Recommended Video

Play Off-க்கு தகுதி பெறுமா CSK? | IPL 2022 | Oneindia Tamil

இதுவரை 2020ஆம் ஆண்டு சீசனில் மட்டும் தான் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றது. தற்போது அதே போல் ஒரு சோகமான சூழலில் சென்னை அணி சிக்கியுள்ளது.

சென்னை அணி முதல் முறையாக சீசன் தொடக்கத்தில் 4 போட்டியில் தொடர்ந்து தோல்வியை தழுவியது.

பிளே ஆப் கணக்கு

பிளே ஆப் கணக்கு

இதே போன்ற ஒரு சூழலில் தான் மும்பை அணியும் உள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸ்க்கு இது புதுசு அல்ல. சீசன் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து 4 போட்டியில் இதுவரை 4 முறை தோல்வி அடைந்துள்ளது. இதே போன்று ஆர்சிபி அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற எப்போதும் கால்குலேட்டரை வைத்து கொண்டு கணக்கு போட்டு கொண்டு இருக்கும்.

வாய்ப்பு இருக்கா?

வாய்ப்பு இருக்கா?

ஆனால் சிஎஸ்கே அணிக்கு இப்படி ஒரு சிக்கல் தற்போது 2வது முறையாக வந்துள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கண்ணாயிரம், அந்த கால்குலேட்டரை எடு என்று கணக்கு போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தற்போது கணக்கு வெறும் சிம்பிள் தான். 14 லீக் போட்டியில் குறைந்தது 8 போட்டியிலாவது வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

8 ஆட்டம்

8 ஆட்டம்

அதுவும் ரன் ரேட் சிக்கல் இருப்பதால் குறைந்தது 9 போட்டியிலாவது வெல்ல வேண்டும். மேலும் பிளே ஆப் சுற்றில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிக்கு தான் தோற்றால் கூட மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் சிஎஸ்கே தற்போது இருக்கும் நிலைக்கு பிளே ஆப் சுற்றுக்கு சென்றாலே போதும். சிஎஸ்கே குறைந்தது எஞ்சியுள்ள 10 போட்டியில் 8 ஆட்டத்திலாவது வெல்ல வேண்டும்.

ரன்ரேட் சிக்கல்

ரன்ரேட் சிக்கல்

அதிலும் சிஎஸ்கேவின் ரன் ரேட்டும் பரிதாபமான நிலையில் உள்ளதால், இனி அந்த அணி சில போட்டியில் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இனி ஒரு போட்டியல் கூட சிஎஸ்கே தோற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது மிகவும் சிரமம். காரணம், இது 8 அணிகள் பங்கேற்கும் தொடர் அல்ல, 10 அணிகள் பங்கேற்கிறது,இதனால் பந்தயம் இன்னும் கடுமையாக இருக்கும்.

Story first published: Sunday, April 10, 2022, 17:48 [IST]
Other articles published on Apr 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+