Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் ஐபிஎல் சூதாட்ட புகார்.. சிஎஸ்கே மீது திரும்பும் பார்வை.. விசாரணையை தொடங்கிய சிபிஐ - விவரம்

மும்பை: ஐபிஎல் தொடரில் மீண்டும் மேட்ச் ஃபிக்சிங், சூதாட்ட புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் அதிக பணம் கொட்டும் பிரபலமான உள்நாட்டு தொடராக ஐபிஎல் தொடர் உருவெடுத்துள்ளது.

இந்த முறை கூடுதலாக 2 அணிகளும் சேர்க்கப்பட்டதால், பிசிசிஐ-க்கு பல மடங்கு வருமானம் கூடியுள்ளது.

ஐபிஎல் சூதாட்ட புகார்

ஐபிஎல் சூதாட்ட புகார்

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீண்டும் சூதாட்ட புகார்கள் சூடுபிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது மேட்ச் ஃபிக்சிங் மற்றும் சூதாட்ட புகார்கள் எழுந்தது. இதனையடுத்து விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து சதி

பாகிஸ்தானில் இருந்து சதி

அதாவது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தை செய்ய பாகிஸ்தானில் இருந்து ஐடியாக்கள் வந்திருப்பது, அதனை இந்தியாவில் இருந்து செயல்படுத்தியதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்த கும்பல் சூதாட்டம் மூலம் பணம் ஈட்டி, அதனை வங்கி கணக்குகள் மூலம் அயல்நாட்டிற்கு அனுப்பி வந்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்கள் கொடுத்து வங்கி கணக்கு உருவாக்கியுள்ளனர்.

சிஎஸ்கேவுக்கு சிக்கலா?

சிஎஸ்கேவுக்கு சிக்கலா?

இந்நிலையில் இந்த சூதாட்ட பிரச்சினையில் தற்போது அனைவரின் பார்வையும் சிஎஸ்கே மீது திரும்பியுள்ளது. ஏற்கனவே சூதாட்ட புகாரில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் அவர்கள் மீதும் விசாரணை இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிஎஸ்கே வெளியேறியது

சிஎஸ்கே வெளியேறியது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் இந்தாண்டு தொடரில் இருந்தே வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 14, 2022, 18:33 [IST]
Other articles published on May 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+