ஐபிஎல்-ஐ சீர்குலைக்க பாகிஸ்தானில் இருந்து சதி.. 3 பேரை கைது செய்த சிபிஐ.. சிக்கும் முக்கிய தலைகள்?
மும்பை: ஐபிஎல் தொடரை கெடுப்பதற்காகவும், பெயரை கெடுப்பதற்காகவும் பாகிஸ்தானில் இருந்து முயற்சி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
உலகின் மிகவும் பிரபலமான உள்நாட்டு கிரிக்கெட் தொடராக ஐபிஎல் இருந்து வருகிறது. மற்ற தொடர்களை விட ஐபிஎல்-ல் தான் பணம் அதிகம் கொட்டுகிறது.
இப்படி இருக்கையில் ஐபிஎல் தொடரை முந்திக்காட்ட வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

ஐபிஎல் சர்ச்சை
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல்-ல் சூதாட்டம், மற்றும் மேட்ச் ஃபிக்சிங் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டால் சிபிஐ விசாரணை நடத்தியது. இதில் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளன. விசாரணையின் முடிவில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

விசாரணை முடிவு
அதாவது ஐபிஎல்-ல் சூதாட்டம் நடத்துவதற்காக ஒரு கும்பல் இறங்கியுள்ளது. இவர்கள் போட்டியின் முடிவுகளை மாற்றி அமைத்து, பலரிடம் இருந்து பணங்களை பறித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இதற்கான திட்டங்கள் பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹவாலா பணம்
இதற்காக இந்தியாவில் போலியான ஆதாரங்களை கொடுத்து வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து பணத்தையும் அயல்நாட்டு கணக்குகளுக்கு அனுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் முக்கிய அதிகாரிகளின் தலையீடுகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

நிலவும் பரபரப்பு
ஐபிஎல் தொடர் தற்போது 10 அணிகளுடன் நடைபெற்று வருவதால் எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளன. போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படி இருக்கையில் மீண்டும் சூதாட்ட புகார் எழுந்திருப்பது பிசிசிஐ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications