
சிஎஸ்கே புது கேப்டன்
41 வயதாகும் எம்.எஸ்.தோனி இந்தாண்டு மட்டும் சிஎஸ்கேவை வழிநடத்திவிட்டு ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் ட்விஸ்டாக கேப்டன் பதவியை மட்டும் ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். மேலும் முழு நேர பேட்ஸ்மேனாக விளையாடவுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் அது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல.

வாய்ப்பு இனி இல்லை
கடந்த 2 சீசன்களாகவே தோனியின் பேட்டிங் மிக மோசமாக உள்ளது. கடந்தாண்டு 16 போட்டிகளில் விளையாடி வெறும் 114 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். கேப்டன்சி என்ற பதவி மட்டும் தான் அவரின் இடத்தை காப்பாற்றி வந்தது. ஆனால் தற்போது ஃபார்மில் இல்லாத வீரர் ஒருவரை ப்ளேயிங் 11ல் இருந்து ஜடேஜா நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அப்படி அவர் நீக்கப்பட்டால் அடுத்த விக்கெட் கீப்பர் யார்? என்ற கேள்வி எழலாம்.

ராயுடு செய்த காரியம்
தோனிக்கு அடுத்ததாக விக்கெட் கீப்பராக செயல்பட அம்பத்தி ராயுடு ஆசைப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் கொண்ட அம்பத்தி ராயுடு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார். ஆனால் மெகா ஏலத்தின் போது திடீரென தன்னை ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என பதிவு செய்திருந்தார். குறிப்பிட்டபடியே சென்னை அணி அவரை ஏலம் எடுத்தது.

கனவு நினைவேறியது
ஏதோ ஆசையில் செய்கிறார் என அப்போது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது தோனியின் இடத்திற்கு மாற்றாக அம்பத்தி ராயுடு இருக்கப்போகிறார் என்பது தெரிகிறது. இந்த சீசனில் தோனி பெஞ்சில் அமரவைக்கப்படும் ஒவ்வொரு போட்டியிலும் அம்பத்தி ராயுடு விக்கெட் கீப்பராக செயல்படவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











