Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் மகனுக்கு கெடு.. ரோகித் சர்மா போட்ட மெகா திட்டம்.. மும்பை அணியில் அதிரடி திருப்பம்!

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு கேப்டன் ரோகித் சர்மா நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் -ல் 5 முறை சாம்பியன் பட்டம் வாங்கிய மும்பை அணிக்கு, இந்தாண்டின் தொடக்கமும் மிகவும் மோசமாகவே உள்ளது.

அந்த அணி விளையாடிய முதல் போட்டிகளிலும் தோல்விகளை மட்டுமே பெற்றுள்ளது. இதுபோன்று அந்த அணிக்கு நடப்பது இது 5வது முறையாகும்.

மும்பை அணி சோகம்

மும்பை அணி சோகம்

இதற்கு முன் நடந்த சீசன்களில் மும்பை அணி தரமான கம்பேக் கொடுத்திருந்தது. ஆனால் தற்போது அது கஷ்டம் தான். ஏனென்றால் முன்பெல்லாம் ஜஸ்பிரித் பும்ராவுடன் ட்ரெண்ட் போல்ட் இருந்தார். அவரை மெகா ஏலத்தில் விட்டுக்கொடுத்த மும்பை அணி, ஜோஃப்ரா ஆர்ச்சரை வாங்கியது. அவரோ காயம் காரணமாக வெளியேறிவிட்டார்.

மோசமான விளைவு

மோசமான விளைவு

அதன் விளைவு தான் கொல்கத்தா போட்டியில் தெரியவந்தது. டேனியல் சாம்ஸ் வீசிய ஒரே ஓவரில் பேட் கம்மின்ஸ் 35 ரன்களை விளாசினார். இதனால் வெற்றிக்கு அருகில் வரை சென்ற மும்பை அணி பெரும் ஏமாற்றத்துடன் திரும்பியது. கேப்டன் ரோகித் சர்மாவும் கடும் கோபத்துடன் காணப்பட்டார்.

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

இந்நிலையில் அடுத்த போட்டிக்காக ரோகித் சர்மா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது சச்சின் டெண்டுல்கர் மகன், அர்ஜுன் டெண்டுல்கரை முதல்முறையாக ஐபிஎல்-ல் களமிறக்கவுள்ளார். டேனியல் சாம்ஸை போன்று அர்ஜுன் டெண்டுல்கரும் இடதுகை வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டர் தான். முதல் தர கிரிக்கெட்டில் சரியான அனுபவம் இல்லாததால், அவருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது.

என்ன நிபந்தனை

என்ன நிபந்தனை

இதுகுறித்து அர்ஜுன் டெண்டுல்கரிடம் பேசியுள்ள ரோகித் சர்மா, உன்னை நம்பி வாய்ப்பு தருவதாகவும், கிடைக்கும் வாய்ப்புகளில் திறமையை நிரூபித்து அணியில் இடத்தை தக்கவைக்க வேண்டும் எனவும் கூறியதாக தெரிகிறது. மேலும் சச்சினின் மகன் என்ற விமர்சனங்களால் தான் ரோகித் இதுபோன்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 அடுத்த போட்டி

அடுத்த போட்டி

மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளை இரவு புனே மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதே மைதானத்தில் மும்பை அணி 2 தோல்விகளை சந்தித்துள்ளதால் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

Story first published: Friday, April 8, 2022, 17:59 [IST]
Other articles published on Apr 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+