சிஎஸ்கே - ஜடேஜா இடையே கருத்து வேறுபாடா?.. ட்விட்டரில் அன்ஃபாலோ செய்யப்பட்டதா.. உண்மை நிலவரம் என்ன?
மும்பை: சிஎஸ்கே அணிக்கும் - ஜடேஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல சிக்கல்கள் இந்தாண்டு உருவாகின.
இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ளதால் தற்போது ப்ளே ஆஃப் வாய்ப்பு சற்று அதிகரித்துள்ளது.

கேப்டன்சி பிரச்சினை
ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் முதல் சில போட்டிகளில் தோல்வியடைந்ததால் அவரின் மீது சிஎஸ்கே நிர்வாகம் நம்பிக்கை இழந்தது. இதனையடுத்து தொடரின் பாதியிலேயே மீண்டும் தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இது ஜடேஜாவின் முழு சம்மதத்துடன் எடுக்கப்பட்ட முடிவு எனக்கூறப்பட்டாலும், அதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

திடீரென நீக்கம்
அந்த சந்தேகங்களை அதிகரிக்கும் வகையில் தான் நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே ப்ளேயிங் 11ல் ஜடேஜா இடம்பெறவில்லை. முக்கிய வீரரான அவரை திடீரென நீக்கியதற்கான காரணத்தை சொன்ன தோனி, ஜட்டு முழு உடற்தகுதியுடன் இல்லை எனக்கூறினார்.

ஜடேஜா அதிருப்தியா?
இந்நிலையில் ஜடேஜா கடும் அதிருப்தியில் இருந்ததே அதற்கு காரணம் எனத்தகவல் பரவி வருகிறது. கேப்டன்சி சுதந்திரம் கொடுக்காமல், மீண்டும் பதவியை பறித்துக்கொண்டதாக அணி நிர்வாகத்துடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் ஜடேஜாவை ட்விட்டரில் பின் தொடர்வதை சிஎஸ்கே நிறுத்திவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

உண்மை நிலவரம் என்ன
ஆனால் உண்மையில் ஜடேஜாவை இன்னும் பின் தொடர்ந்து தான் வருகிறது. இதுகுறித்து பேசியிருந்த அணியின் தலைமை செயலாளர் காசி விஸ்வநாதன் இது முழுக்க முழுக்க ஜடேஜா- தோனியின் முடிவுகள் ஆகும். ஜடேஜாவே தான் தோனியிடம் கோரியிருந்தார். அணி நிர்வாகம் தலையிடவில்லை. கடும் அழுத்தங்கள் காரணமாக அவரே பதவி விலகியதாகவும், இதில் எந்தவித மனக்கசப்பும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

தோனி மீது விமர்சனம்
எது எப்படி இருந்தாலும் தோனியின் மீதுதான் விமர்சனங்கள் அதிகரிக்கின்றன. ஏனென்றால் தோனி சுற்றி மெகா ஏலத்தில் ஒரு அணியை கட்டமைத்துவிட்டு, அதில் ஜடேஜாவை வழிநடத்த கூறினால் அது எப்படி சரிவரும். உண்மையிலேயே ஜடேஜாவுக்கு கேப்டன்சி செய்கையில் சுதந்திரம் இல்லை என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications