
ருத்துராஜ் எதிர்காலம்
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் 0,1,1 என மூன்று இன்னிங்சிலும் சொதப்பினார். இதனால் அவரது இடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய ஜடேஜா, ருத்துராஜ் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.

வாய்ப்பு தருவோம்
அவர் அடுத்த போட்டியிலும் விளையாடுவார். ருத்துராஜ் மீண்டும் ஃபார்ம்க்கு திரும்புவார் என நம்பிக்கை உள்ளது. ருத்துராஜ் கடந்த காலங்களில் எங்கள் அணிக்காக பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். இதனால் நாங்கள்அவருக்கு ஊக்கம் கொடுப்போம். இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வி இழந்ததற்கு காரணம் பேட்டிங் தான்.

தோல்விக்கு காரணம்
நாங்கள் கொத்து கொத்தாக விக்கெட்டை இழந்தோம். பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. அடுத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன். சிவம் துபே இந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடினார். அவருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து, நெருக்கடி ஏற்படாமல் பார்த்து கொள்வோம் என்று கேப்டன் ஜடேஜா கூறினார்.

அடுத்த போட்டி
இனி சிஎஸ்கேவுக்கு 5 நாள் ஓய்வு கிடைக்க உள்ளது. சிஎஸ்கேவின் அடுத்த போட்டி வரும் 9ஆம் தேதி சனிக்கிழமை ஐதராபாத் அணியுடன் மோத உள்ளது. இந்த இடைவெளியில் சிஎஸ்கே தங்களது யுத்தியை மாற்றி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











