சிஎஸ்கே கேப்டன் பதவியால் குஷியான ஜடேஜா.. ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை..கேப்டனான பிறகு முதல் பேட்டி
மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு சீசனின் முதல் போட்டி வரும் 26ஆம் தேதி தொடங்கும் நிலையில், கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளார்.
தோனியின் பேட்டிங் ஃபார்மும் தற்போது முன்பு போல் இல்லை என்பதால் பிளேயிங் லெவனில் அவர் இடம்பெறுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ரொம்ப புதுசு
ஜடேஜா கேப்டன் பதவிக்கு ரொம்ப புதுசு. இதுவரை 250 டி20 போட்டிக்கு மேல் விளையாடிய அவர் தற்போது தான் முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். இதுவரை ஒரு முறை மட்டும் அண்டர் 19 கிரிக்கெட் காலத்தில் ஜடேஜா ஒரு போட்டிக்கு இந்திய அணியை தலைமை தாங்கி வெற்றி பெற வைத்தார்.

ஜடேஜா மகிழ்ச்சி
இதனால் முன் அனுபவம் இல்லாத நிலையில், ஜடேஜா எப்படி கேப்டன் பொறுப்பை வகிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில், கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பேசிய ஜடேஜா, இந்த பொறுப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். ஆனால் தோனி போன்ற ஒரு ஜாம்பவான் இடத்தை என்னால் நிரப்ப முடியுமா என்று தெரியவில்லை.

பயம் இல்லை
சிஎஸ்கே கேப்டன் என்பது மிகப் பெரிய பொறுப்பு. ஆனால் எனக்கு எந்த பயமும் இல்லை, பதற்றமும் இல்லை. ஏன் என்றால் எனக்கு களத்தில் உதவி செய்ய தோனி இருக்கிறார். எனக்கு ஏதாவது யோசனை தேவை என்றால், அறிவுரை தேவை என்றால் தோனியிடம் நான் கேட்டு நடந்து கொள்வேன். அதனால் எந்த சிக்கலும் இருக்காது.

ஜடேஜா கோரிக்கை
எனக்கு எப்போதும் தோனி பாய் ஆதரவு இருக்கும். ரசிகர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். போட்டியின் போது பார்க்கலாம் என்று கூறினார். ஜடேஜாவின் புதிய பொறுப்புக்கு ரெய்னா உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை தோனி தனது ராஜினாமா குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications