For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேக்ஸ்வெல்- ன் தெனாவட்டு.. சிஎஸ்கேவிடம் வீம்புகாட்டிய விஷயம்.. ஜடேஜா கொடுத்த தரமான பதில் - வீடியோ!!

மும்பை: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் தெனாவட்டாக மேக்ஸ்வெல் செய்த விஷயத்திற்கு ஜடேஜா தரமான பாடம் எடுத்தார்.

Recommended Video

IPL 2022: CSK vs RCB , What Captains Said | Ravindra Jadeja | Faf du Plessis | OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூப்ளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 கடுமையான இலக்கு

கடுமையான இலக்கு

இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி, ஒவ்வொரு பந்தையும் சொல்லி சொல்லி அடித்தது. சீனியர் வீரர் ராபின் உத்தப்பா 50 பந்துகளில் 88 ரன்களும், இளம் வீரர் ஷிவம் தூபே 46 பந்துகளில் 95 ரன்களையும் விளாசினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை குவித்தது.

 ஆர்சிபி இன்னிங்ஸ்

ஆர்சிபி இன்னிங்ஸ்

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் டூப்ளசிஸ் 8 ரன்கள், அனுஜ் ராவத் 12, விராட் கோலி 1 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் ஒட்டுமொத்த பொறுப்பும் க்ளென் மேக்ஸ்வெல் மீது இறங்கியது. இதற்கேற்றார் போலவே மேக்ஸ்வெல்லும் ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்களை அடித்து சிஎஸ்கேவுக்கு தலைவலி கொடுத்தார்.

 ரசிகர்களுக்கு ஆச்சரியம்

ரசிகர்களுக்கு ஆச்சரியம்

அப்போது தான் மேக்ஸ்வெல்லுக்கு பவுலிங் வீச ஜடேஜா வந்தார். இதனை பார்த்த அனைவருமே பயந்தனர். இதற்கு காரணம், மேக்ஸ்வெல் vs ஜடேஜா மோதல் தான். மேக்ஸ்வெல்லுக்கு எதிராக டி20ல் மட்டும் ஜடேஜா 6 முறை விக்கெட் எடுத்திருந்தார். அதுவும் ஸ்டம்ப் லைனிலேயே வீசி ஜடேஜா வந்தாலே மேக்ஸ்வெல் ஸ்டம்ப் அவுட் ஆவது உறுதி என்ற நிலை இருந்தது.

மேக்ஸ்வெல்லின் துணிச்சல்

மேக்ஸ்வெல்லின் துணிச்சல்

முழு பொறுப்பையும் ஏற்றிருந்த மேக்ஸ்வெல், ஜடேஜாவின் ஓவரில் நிதானம் காட்டிருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே வரலாற்றை மாற்றுகிறேன் என்ற நினைப்பில் அடித்து ஆட ஓங்கினார். அதுவும் ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தை தெனாவட்டாக பேட்டை சுழற்றினார்.

கில்லாடி ஜடேஜா

கில்லாடி ஜடேஜா

இதனை நன்கு அறிந்திருந்த ஜடேஜா, அந்த பந்தை எந்தவித டேர்னிங்கும் இன்றி நேராக ஸ்டம்ப் லைனில் வீசினார். இதனால் டி20ல் 7வது முறையாக மேக்ஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றினார். க்ளென் மேக்ஸ்வெல் இந்த தவறால் ஆர்சிபி அணி 110 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. மேலும்

Story first published: Wednesday, April 13, 2022, 15:07 [IST]
Other articles published on Apr 13, 2022
English summary
IPL 2022: Jadeja gets a special record against maxwell in CSK vs RCB Match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+