For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தீபக் சஹாரின் மாற்று.. பெரும் ரிஸ்க் எடுக்க துணிந்த ஜடேஜா.. காசி விஸ்வநாதன் வெளியிட்ட முக்கிய தகவல்!

மும்பை: தீபக் சஹாருக்கு மாற்று வீரரை தேர்வு செய்வதில் சென்னை அணி மிகப்பெரிய ரிஸ்க் எடுக்க துணிந்துள்ளது.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடர் மோசமானதாகவே அமைந்துள்ளது.

இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 5 தோல்விகளை பெற்று மிகவும் பரிதாபமானதாக உள்ளது.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

சென்னை அணியின் தோல்விக்கு ஜடேஜாவின் கேப்டன்சி தான் பிரச்சினை என ஒருபுறம் கூறினாலும், பவுலிங் சரியாக இல்லை என்பது தான் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. பவர் ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்ற சரியான பவுலிங் படை இல்லை. தீபக் சஹாரை மிகவும் மிஸ் செய்கின்றனர் எனத் தெரிகிறது.

 2வது காயத்தால் வினை

2வது காயத்தால் வினை

ஏப்ரல் 26ம் தேதிக்குள் அணிக்கு திரும்பிவிடுவார் என நம்பப்பட்ட தீபக் சஹாருக்கு 2வதாக முதுகிலும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அடுத்த 4 மாதங்களுக்கு அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. எனவே அவருக்கு மாற்று வீரரை தேட வேண்டிய சூழலுக்கு சிஎஸ்கே நிர்வாகம் தள்ளப்பட்டது.

இஷாந்த் சர்மாவுக்கு குறி

இஷாந்த் சர்மாவுக்கு குறி

அதன்படி இஷாந்த் சர்மாவை எடுப்பதாக தகவல் வெளியானது. மும்பை பிட்ச்களில் அனுபவம் வாய்ந்த டெஸ்ட் பவுலர்கள் தான் சிறப்பாக இருக்கின்றனர். எனவே இஷாந்த் சர்மாவை கொண்டு வர முடிவெடுத்தனர். எனவே முகமது ஷமி, உமேஷ் யாதவ் போன்று இஷாந்த் சர்மாவும் வருவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

இதிலும் ஏமாற்றமே

இதிலும் ஏமாற்றமே

இந்நிலையில் அதற்கு ஆப்பு வைத்துள்ளனர். இதுகுறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன், தீபக் சஹார் விஷயத்தில் நாங்கள் தலையிடவில்லை. மாற்று வீரர்களை தேர்வு செய்து அணி குழுவிடம் தெரிவித்தோம். அவர்கள் இதுவரை எவ்வித பதிலும் தரவில்லை. இதன் மூலம் மாற்று வீரர் வேண்டாம் என்ற முடிவில் அவர்கள் இருப்பது போல் தெரிகிறது என கூறினார்.

ஏன் தவறான முடிவு

ஏன் தவறான முடிவு

ஏற்கனவே பவுலிங் படை தத்தளித்து வரும் சூழலில் அதனை காப்பாற்ற ஏதேனும் ஒரு சிறந்த பவுலரை வாங்கியாக வேண்டும். ஆனால் பிடிவாதமாக உள்ள சிஎஸ்கே மாற்று வீரரே வேண்டாம் என நினைப்பது சரியான முடிவு கிடையாது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Story first published: Tuesday, April 19, 2022, 15:41 [IST]
Other articles published on Apr 19, 2022
English summary
Deepak chahar Replacement ( தீபக் சஹாருக்கு மாற்று வீரர் ) சிஎஸ்கே அணியில் தீபக் சஹாருக்கு மாற்று வீரர் யார் என்பது குறித்து காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+