Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 பந்துகளில் 2 விக்கெட்.. நடராஜன் தாருமாறு..வேகத்தால் மிரட்டிய உம்ரான்.. இறுதியில் ரஸில் பட்டாசு

மும்பை: ஐபிஎல் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியும், ஐதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீசியது.

கொல்கத்தா அணியில் அறிமுக வீரராக ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 கேப்டன் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினார். ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனையடுத்து தொடக்க வீரராக வெங்கடேஷ் ஐயரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். ஐதராபாத் அணியில் புவனேஸ்வர் , யான்சென் கூட்டணி தொடக்க ஓவர்களை வீசியது.

பிஞ்ச் ஏமாற்றம்

பிஞ்ச் ஏமாற்றம்

புவனேஸ்வர் குமார் பந்தை நன்று ஸ்விங் செய்தாலும், 5வது பந்தில் வெங்கடேஷ் ஐயர் சிக்சர் விரட்டினார். இதனால் முதல் ஓவரில் 9 ரன்கள் சென்றது. 2வது ஓவரை வீசிய யான்சென், 3வது பந்திலேயே பிஞ்சின் விக்கெட்டை காலி செய்தார். இதனையடுத்து 5வது ஓவரை தமிழக வீரர் நடராஜன் வீசினார்.

நடராஜன் அபாரம்

நடராஜன் அபாரம்

முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஐயரின் ஸ்டம்புகளை சிதறவிட்டார் நடராஜன். இதனையடுத்து களத்துக்கு வந்த சுனில் நரைன் 2வது பந்தை சிக்சருக்கு அடித்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அடுத்த பந்திலேயே நரைன் விக்கெட்டையும் வீழ்த்தி நடராஜன் கேகேஆர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

உம்ரான் வேகம்

உம்ரான் வேகம்

கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க, அவருக்கு அசுர தனமாக பந்துவீசி கடும் நெருக்கடி அளித்தார் உம்ரான் மாலிக். ஒரு கட்டத்தில் உம்ரான் மாலிக் 148 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச, அதனை சற்றும் எதிர்கொள்ள முடியாமல் ஸ்டம்புகள் சிதற ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்.

இறுதியில் அதிரடி

இறுதியில் அதிரடி

இதே போன்று உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சை அடித்து ஆட முற்பட்டு ஜாக்சனும் பெவிலியன் திரும்பினார். இதனால் கேகேஆர் அணி 103 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் நிதிஷ் ரானா மற்றும் ரஸில் ஜோடி அதிரயாக விளையாடி கொல்கத்தா அணியை மிட்டனர். கேகேஆர் அணி கடைசி 5 ஓவரில் 55 ரன்கள் எடுக்க, நிதிஷ் ராணா அரைசதமும், ரஸில் 25 பந்தில் 49 ரன்களும் அடித்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டு இழப்பிற்கு கேகேஆர் 175 ரன்கள் எடுத்தது.

Story first published: Friday, April 15, 2022, 23:41 [IST]
Other articles published on Apr 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+