Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ரூ.20 கோடி போச்சே !!” புதிய அணிகளுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ..பரிதாப நிலையில் 2 முக்கிய வீரர்கள்!

சென்னை: பிசிசிஐ-ன் முடிவால் கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கான் ஆகியோர் கவலையடையும் சூழல் உருவாகியுள்ளது.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் ஜனவரி 2வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை 2 புதிய அணிகள் வருகையால், ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. அந்த பட்டியலும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

இதில் மிகப்பெரிய மாற்றங்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வெளியேறினார். பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ரூ.16 கோடிக்கு தக்கவைக்க முடிவெடுத்த போதும், ராகுல் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு காரணம் புதிதாக வந்துள்ள லக்னோ அணி தான்.

2 முக்கிய வீரர்கள்

2 முக்கிய வீரர்கள்

புதிதாக வந்துள்ள 2 அணிகளும் மெகா ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை நேரடி ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம். அந்தவகையில் கே.எல்.ராகுலை ரூ.20 கோடி சம்பளத்திற்கு லக்னோ அணி ஒப்பந்தம் செய்யவுள்ளது. இதே போல சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முக்கிய வீரர் ரஷித் கானை ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம் செய்யவுள்ளது. இவர் ஐதராபாத் அணியிடம் ரூ.16 கோடி கேட்டதாகவும், அதில் உடன்பாடு எட்டப்படாததால், சம்பளத்திற்காக அணி மாறுகிறார்.

 குற்றச்சாட்டுக்கள்

குற்றச்சாட்டுக்கள்

இந்நிலையில் இவர்கள் இருவருக்குமே தற்போது புதிய ஆப்பு கிளம்பியுள்ளது. புதிதாக வந்துள்ள அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5,625 கோடி கொடுத்து வாங்கியது. ஆனால் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் சில சட்ட விரோத நிறுவனங்களில் சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதற்கான விசாரணைகளும் நடந்து வருகிறது.

பிசிசிஐ-ன் முடிவு

பிசிசிஐ-ன் முடிவு

இது ஒருபுறம் இருக்க, அகமதாபாத் அணி குறித்த விசாரணையின் முடிவில் தான் புதிய அணிகள் ஐபிஎல் தொடருக்குள் வருமா? வராதா? என்ற முடிவு தெரியவரும். எனவே முடிவு எட்டப்படும் வரை லக்னோ அணியும் வீரர்களிடம் ஒப்பந்தம் செய்யக்கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதனால் கே.எல்.ராகுல் மற்றும் ரஷித் கானின் நிலைமை தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

Recommended Video

இந்திய அணியின் Captain Rohit Sharma அதிரடியான முதல் திட்டம் | Oneindia Tamil
 வீரர்களின் பரிதாப நிலை

வீரர்களின் பரிதாப நிலை

ஒருவேளை புதிய அணிகள் வெளியேற்றப்பட்டால், அவர்கள் இருவரும் நேரடியாக மெகா ஏலத்தில் பங்கேற்பார்கள். அப்போது கே.எல்.ராகுலை ரூ.20 கோடி கொடுத்து எடுக்க அணிகள் முன்வருமா என்பது சந்தேகமே? இதே போல ரஷித் கான் ஆசைப்பட்ட ரூ.16 கோடி அளவிற்கு அவர் ஏலம் போக மாட்டார் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி நடந்துவிட்டால் இருவரும் அணியை விட்டு வெளியேறியது பலனில்லாமல் போகும். மேலும் கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பதவியும் கிடைக்காது.

Story first published: Sunday, December 12, 2021, 18:20 [IST]
Other articles published on Dec 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+