Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் -க்குள் வந்த பீஸ்ட்.. லக்னோ - ஐதராபாத் அணி மோதல்.. கே.எல்.ராகுல் போட்ட மெகா ஸ்கெட்ச்!!

மும்பை: ஐதராபாத் அணியின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கும் அளவிற்கு ப்ளேயிங் 11-ஐ கொண்டு வந்துள்ளார் கே.எல்.ராகுல்.

ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் இன்று லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வில்லியம்சன் துணிச்சல்

வில்லியம்சன் துணிச்சல்

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 2வதாக பேட்டிங் செய்யும் அணிகள் தான் வெற்றி பெற்று வந்தன. ஐதராபாத் அணி மட்டும் தனது முதல் போட்டியில் 2வதாக பேட்டிங் செய்தும், 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எனினும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் ப்ளேயிங் 11ல் மாற்றம் செய்யாமல்,மீண்டும் முதலில் பவுலிங் செய்கிறது.

லக்னோ அணி

லக்னோ அணி

லக்னோ அணியை பொறுத்தவரையில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றதால், அதே அணியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீராவுக்கு பதிலாக ஜேசன் ஹோல்டரை அறிமுகம் செய்துள்ளனர்.

 கே.எல்.ராகுல் ஸ்கெட்ச்

கே.எல்.ராகுல் ஸ்கெட்ச்

வெஸ்ட் இண்டீஸின் ஆல்ரவுண்டரான ஜேசன் ஹோல்டர் கடந்த சீசன் வரை ஐதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். ஆனால் அவரை அந்த அணி தக்கவைக்கவில்லை. இந்நிலையில் வில்லியம்சன், புவனேஷ்வர் குமார் என அந்த அணியின் முக்கிய வீரர்கள் குறித்து நன்கு அறிந்த ஹோல்டரையே ஐதராபாத் அணிக்கு எதிராக கே.எல்.ராகுல் பயன்படுத்தவுள்ளார்.

 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

லக்னோ ப்ளேயிங் 11 : கே.எல்.ராகுல், குயிண்டன் டிக்காக், மணிஷ் பாண்டே, எவின் லீவிஸ், தீபக் ஹூடா, ஆயூஸ் பதோனி, க்ருணால் பாண்ட்யா, ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான்

ஐதராபாத் ப்ளேயிங் 11: கேன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரண், எய்டன் மார்க்ரம், அப்துல் சமாத், ரொமாரியோ செஃப்பேர்ட், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக்

Story first published: Monday, April 4, 2022, 21:31 [IST]
Other articles published on Apr 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+