Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பஞ்சாப்பை பழிதீர்த்த கே.எல்.ராகுல்.. இவ்வளவு மோசமான பேட்டிங்கா??.. வச்சு செய்யும் ரசிகர்கள்!

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

இரு அணிகள் மோதிய 42வது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் பேட்டிங் வரிசை படுமோசமாக சொதப்பியது.

லக்னோ அணி இன்னிங்ஸ்

லக்னோ அணி இன்னிங்ஸ்

லக்னோ அணி ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் 6 ரன்களுக்கு அவுட்டாகி ஏமற்றமளித்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த டி காக் - தீபக் ஹூடா இருவரும் பார்டனர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். இவர்கள் சேர்ந்து 13 - 1 என இருந்த ஸ்கோரை 98 ரன்கள் வரை சேர்த்தது. எனினும் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

கடைசி நேர ஸ்கோர்

கடைசி நேர ஸ்கோர்

குயிண்டன் டிக்காக் 46 ரன்களுக்கும், தீபக் ஹூடா 34 ரன்களுக்கும் வெளியேறினர். இதன்பின்னர் வந்த ஒரு வீரர் கூட சோபிக்கவில்லை. க்ருணால் பாண்ட்யா 7, ஸ்டோய்னிஸ் 1, ஆயூஸ் பதோனி 4, ஹோல்டர் 11 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்களை குவித்தது.

 பஞ்சாப் இன்னிங்ஸ்

பஞ்சாப் இன்னிங்ஸ்

இதன் பின்னர் வந்த பஞ்சாப் அணி, லக்னோவை விட மோசமாக சொதப்பியது. ஓப்பனிங் வீரர்கள் மயங்க் அகர்வால் 25 ரன்கள், ஷிகர் தவான் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த யாருக்குமே சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. பனுக்கா ராஜபக்சே 9, லிவ்விங்ஸ்டன் 18, ஜித்தேஷ் சர்மா 2 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.

படு மோசமான தோல்வி

படு மோசமான தோல்வி

நீண்ட நேரமாக போராடி வந்த ஜானி பேர்ஸ்டோவும் ஒரு கட்டத்தில் 32 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Story first published: Friday, April 29, 2022, 23:36 [IST]
Other articles published on Apr 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+