Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடந்தாண்டே பதவி விலகிய தோனி.. வெளிப்படையாக இருந்துள்ள சிஎஸ்கேவின் திட்டம்.. இதை கவனித்தீர்களா?

மும்பை: கடந்த 2021ம் ஆண்டே சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து விலகப்போவதை தோனி மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக எம்.எஸ்.தோனி நேற்று அறிவித்தார்.

புதிய கேப்டனாக அணியின் சீனியர் வீரர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு சீசனின் முதல் போட்டியில் இருந்தே பொறுப்பை ஏற்கிறார்.

சிஎஸ்கே புதிய கேப்டன்

சிஎஸ்கே புதிய கேப்டன்

தோனி ஒரு கேப்டனாகவே ஓய்வை அறிவித்திருக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசை. ஆனால் கோலி விஷயத்தில் செய்த திட்டத்தையே ஜட்டுவின் விஷயத்திலும் செய்துள்ளார். அதாவது கோலியிடம் கேப்டன்சியை ஒப்படைத்துவிட்டு, சிறிது காலம் உடனிருந்து அவரை தயார்படுத்திவிட்டு சென்றார். இதனையே தான் சிஎஸ்கேவிலும் ஜடேஜாவை தயார் படுத்த தோனி 2 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த பணியை கடந்தாண்டே மறைமுகமாக கூறியுள்ளார்.

கடந்தாண்டே ப்ளான்

கடந்தாண்டே ப்ளான்

கடந்த 2 சீசன்களாக தோனியின் பேட்டிங் சரியில்லை என விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அவர் பேட்டிங்கில் டாப் ஆர்டர் வரிசையில் விளையாடினால் சிறப்பாக இருக்கும் என வல்லுநர்கள் கூறினர். 2020ம் ஆண்டு வரை 4வது அல்லது 5வது வீரராக களமிறங்கி வந்த தோனி, கடந்த சீசனில் யார் சொல்லியும் கேட்காமல் 7வது வீரராக களமிறங்க தொடங்கினார். இதற்கு காரணம் ரவீந்திர ஜடேஜான் தான்.

கண்காணித்த தோனி

கண்காணித்த தோனி

ஒவ்வொரு போட்டியிலும் ஃபினிஷர் பணிக்கு ஜடேஜாவை களமிறக்கி தயார்படுத்தினார். ஜடேஜாவும் அதனை மிக சிறப்பாக பயன்படுத்தினார். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ஜட்டு காட்டிய அதிரடி அடுத்த தோனியை காட்டியது. இதனால் கடந்த வருடம் முழுக்க அவரின் செயல்பாட்டை பார்த்துவிட்டு, இந்தாண்டு பதவியை கொடுத்துள்ளார். எனினும் இந்தாண்டு முழுவதும் அவருடன் இருந்துவிட்டு தான் விடைபெறவுள்ளார்.

தோனி வைத்த நம்பிக்கை

தோனி வைத்த நம்பிக்கை

ரவீந்திர ஜடேஜா கடந்த 2012ம் ஆண்டு முதல் சிஎஸ்கேவில் இருந்து வருகிறார். தோனியின் அத்தனை வியூகங்களும், கேப்டன்சி நுட்பங்களும் ஜட்டுவுக்கு தெரியும். இதுமட்டுமல்லாமல் ஜடேஜாவுக்கு நீண்ட கால கிரிக்கெட் அனுபவம் உள்ளதால் அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கையை தோனி வைத்துள்ளார். இதனை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Friday, March 25, 2022, 11:51 [IST]
Other articles published on Mar 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+