Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ.. இதுக்கு இவ்வளவு பவரா..?? மார்கஸ் ஸ்டோய்னிஸ் செய்த விஷயம்.. ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் செய்த ஒரு விஷயம், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி அட்டகாச பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

அதிரடி ஓப்பனிங்

தொடக்க வீரர் கே.எல்.ராகுல், தனது 100வது ஐபிஎல் போட்டியான இன்று ஒவ்வொரு பந்தையும் துவம்சம் செய்தார். 55 பந்துகளை சந்தித்த அவர், மற்றொரு தொடக்க வீரர் குயிண்டன் டிகாக் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய மணிஷ் பாண்டே 38 ரன்களை சேர்த்திருந்த போது விக்கெட் ஆனார். இதனால் அணியின் ஸ்கோர் 13 ஓவர்களில் 124 ரன்கள் என்ற நிலைக்கு சென்றது.

அதிர்ச்சி தந்த ஸ்டோய்னிஸ்

அதிர்ச்சி தந்த ஸ்டோய்னிஸ்

முருகன் அஸ்வின் வீசிய முதல் பந்தை சற்றும் யோசிக்காமல் சிக்ஸருக்கு கிடாசினார். சுமார் 104 மீட்டர் தூரத்திற்கு சென்ற அந்த சிக்ஸருக்கு பின்னால் உள்ள காரணம் தான் ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தியது.

சிக்ஸர் பின் உள்ள காரணம்

சிக்ஸர் பின் உள்ள காரணம்

சிக்ஸர் அடித்த பிறகு சிரித்தப்படியே வந்த ஸ்டோய்னிஸ், கே.எல்.ராகுலிடம் மைதானத்தின் ஏதோ ஒரு பகுதியை காட்டி பேசிக்கொண்டிருந்தார். அப்படி என்ன பார்க்கிறார் என்று பார்த்தால், எதிரில் ஸ்டோய்னிஸின் மனைவி உற்சாகமாக போட்டியை பார்த்து வந்துள்ளார். மனைவிக்கு அற்பணிப்பதற்காக தான் தனது முதல் சிக்ஸரை அவ்வளவு வேகத்துடன் பறக்கவிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

 பாட்சா பலிக்கவில்லை

பாட்சா பலிக்கவில்லை

எனினும் அதன் பின்னர் ஸ்டோய்னிஸின் பாட்சா பலிக்கவில்லை. 9 பந்துகளை சந்தித்து வெறும் 10 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனால் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது.

Story first published: Saturday, April 16, 2022, 21:09 [IST]
Other articles published on Apr 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+