Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL-ல் அயல்நாட்டுக்கு மவுசு.. 5 தொடக்க வீரர்களுக்காக கொட்டும் பண மழை.. அப்படி என்ன ஸ்பெஷல்..!!

பெங்களூரு: ஐ.பி.எல். ஏலத்திற்காக பல்வேறு அணிகளும், பல்வேறு யுத்திகளை தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு அணிக்கும், தொடக்க வீரர் என்பது மிகவும் முக்கியம்.

டி20 கிரிக்கெட்டில் தொடக்கம் நன்றாக இருந்தால் தான் அந்த அணியால் பெரிய இலக்கை எட்டவும் முடியும், துரத்தவும் முடியும்.

இந்த நிலையில், எந்த வெளிநாட்டு தொடக்க வீரர்களை வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்பதை தற்போது காணலாம்.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

அனைவரும் வாங்க துடிக்கும் பட்டியலில் முதலில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தான். 149 போட்டிகளில் 5449 ரன்களை குவித்துள்ள வார்னர், ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது டி20 உலகக் கோப்பையிலும் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இதனால் வார்னரை தங்களது அணிக்குள் எடுக்க செம போட்டி நிலவும்.

பாரிஸ்டோ

பாரிஸ்டோ

அடுத்த அதிரடி தொடக்க வீரர் இங்கிலாந்தை சேர்ந்த பாரிஸ்டோ. இவர் விக்கெட் கீப்பிங்கும் செய்வார் என்பதால், இவருக்கு கடும் போட்டி நிலவும். பாரிஸ்டோவின் ஸ்டிரைக் ரேட் 142 . இதனால் எந்த அணி இவரை எடுக்கிறதோ அவர்களுக்கு நிச்சயம் ஜாக்பாட் தான். தொடக்க வீரர்கள் இல்லாமல் கஷ்டப்படும் கொல்கத்தா போன்ற அணிகள் இவரை குறி வைக்கலாம்.

ஜேசன் ராய்

ஜேசன் ராய்

இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு எதிரணியை சிதற அடிக்கும் தனி பலம் உள்ளது. ஒற்றை ஆளாக போட்டியின் போக்கையே மாற்ற கூடியவர். இதனால் ஜேசன் ராய் நல்ல விலைக்கு போவார். பெங்களூரு அணி, பஞ்சாப் அணி, மும்பை அணி இவரை அணியில் எடுக்க அதிக ஆர்வம் காட்டும்.

டுபிளஸிஸ்

டுபிளஸிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான தொடக்க வீரரான டுபிளஸியை குறிவைத்து பல்வேறு அணிகளும் காய் நகர்த்தி வருகின்றன. டுபிளஸிஸ் சென்னை அணிக்கு பல்வேறு வெற்றிகளை பெற்று தந்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் உள்ள டி20 தொடர்களில் விளையாடி வருவதால் டுபிளஸிஸ் செம ஃபார்மில் உள்ளார். இதனால் சென்னை அணியே மீண்டும் ஏவத்தில் எடுக்க யோசனை நடத்தி வருகிறது.

குயின்டன் டி காக்

குயின்டன் டி காக்

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான குயின்டன் டி காக், செம ஃபார்மில் உள்ளார். மும்பை அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வரும் இவரை லக்னோ, அகமதாபாத், பஞ்சாப் அணிகள் கடும் போட்டி போடும். எனினும் மும்பை அணி அவரை மீண்டும் எடுக்க தீவிர முயற்சி செய்யும்.

Story first published: Saturday, January 29, 2022, 20:20 [IST]
Other articles published on Jan 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+