Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு கல் நெஞ்சமா.. சச்சின் மகன் ஆசைக்கு வேட்டு வைத்த ரோகித்.. ஏன் இந்த பிடிவாதம்?

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவின் பிடிவாதம் ரசிகர்களிடையே அதிருப்தி அடைய செய்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 7 முறை தோல்வியை தழுவி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இனிமேல், பிளே ஆப் சுற்றுக்கு மும்பை அணி தகுதி பெற வேண்டும் என்றால், அனைத்து போட்டியிலும் வென்றாலும் கூட, மற்ற அணிகளின் தயவு இருந்தால் தான் நிகழும்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்த நிலையில், மும்பை அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு மோசமாக உள்ளது. நடப்பு சீசனில் மோசமான எக்னாமியை கொண்ட அணியாக மும்பை உள்ளது. கடைசி ஆட்டத்தில் உனாட்கட்டும் சொதப்பியதால் , இன்று மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது.

அர்ஜூன் டெண்டுல்கர்

அர்ஜூன் டெண்டுல்கர்

இந்த தருணத்தில் தான் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், பயிற்சி முகாமில் சிறப்பாக விளையாடி வருகிறார். இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனாக விளங்கும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை விடுத்தனர்.

பிறந்தநானன்று வாய்ப்பு

பிறந்தநானன்று வாய்ப்பு

மேலும், இன்று சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள் என்பதால், அவரது மகனுக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. தந்தையின் பிறந்தநாளன்று, கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, தந்தையின் மனம் குளிர வைக்க வேண்டும் என்று அர்ஜூன் டெண்டுல்கர் ஆசையில் இருந்தார். இது தொடர்பாக ரோகித்திடம் தனது கோரிக்கையை அர்ஜூன் வைத்துள்ளார்.

ரோகித் பிடிவாதம்

ரோகித் பிடிவாதம்

ஆனால், ரோகித் சர்மாவோ போதிய அனுபவம் இல்லாததால் முக்கிய போட்டியில் வாய்ப்பு வழங்க முடியாது. மும்பையால் இனி பிளே ஆப்க்கு செல்லவே முடியாது என்ற நிலை வந்தால் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இன்று முடியாது என்று வெளிப்படையாக கூறிவிட்டார். இதனால் அர்ஜூன் டெண்டுல்கர் விரக்தியில் இருப்பதாக மும்பை அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Sunday, April 24, 2022, 20:37 [IST]
Other articles published on Apr 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+