கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. தோல்விக்கு காரணம் கூறும் ரோகித்.. பந்துவீச்சாளர்கள் மீது பழி
புனே: ஐபிஎல் 15வது சீசனில் முதல் 3 போட்டியில் ஹாட்ரிக் தோல்வியை 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தழுவியது.
முதலில் பேட் செய்த மும்பை அணி சூர்யகுமார் யாதவின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 101 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற இலக்குடன் தடுமாறியது.

ரோகித் விரக்தி
ஆண்டிரு ரஸிலும் ஆட்டமிழக்க, முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் கொல்கத்தா அணி 4 ஓவர்கள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. இதனால் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா விரக்தி அடைந்தார்.

எதிர்பார்க்கவில்லை
தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா, ஆட்டம் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் பாட் கம்மின்ஸ் வந்து இப்படி ஒரு ஆட்டத்தை விளையாடுவார் என்று நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. பேட்டிங்கில் எங்களது நடுவரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடி கௌரவமான இலக்கை கொடுத்தனர்.

காரணம் என்ன?
எங்கள் பந்துவீச்சாளர்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டை கைப்பற்றினாலும், சில தவறுகளை செய்து விட்டனர். குறிப்பாக நாங்கள் நிறுத்திய ஃபில்டிங் செட்டப்க்கு ஏற்றவாறு பந்துவீசவில்லை. யுத்திகளை கடைப்பிடிக்காமல் பந்துவீசியதால் அதிக ரன்கள் சென்றுவிட்டது.

ஜிரணிக்க முடியவில்லை
எனினும் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்திய பாட் கம்மின்ஸ்க்கு என் வாழ்த்துக்கள் என்று கூறினார். இந்த தோல்வியை ஜிரணிக்க கொஞ்சம் கடுமையாக தான் உள்ளது. இன்னும் நாங்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டால் தான் வெற்றி பெற முடியும் என்றார். முன்னதாக பேச தொடங்கும் போது ரோகித் சர்மா, அங்கிருந்த ஒளிப்பதிவாளரிடம் சவுண்டை கொஞ்சம் வேகமாக வைங்க என் ஹிந்தியில் கோப்பத்தில் திட்டினார்.


Click it and Unblock the Notifications