Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டக் அவுட்டில் சாதனை படைத்த ரோகித்.. இந்திய அணியில் இடத்திற்கு ஆபத்து? கடும் நெருக்கடியில் ஹிட்மேன்

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கடும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் மும்பை அணியின் வெற்றியும் பாதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Mumbai Indians-ன் தோல்விக்கு யார் காரணம்? Rohit Sharma சொன்ன விளக்கம்

தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஹிட்மேன் என்று ரோகித் சர்மா போற்றப்படுகிறார். தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்

ஒருநாள் மற்றும் டி20 இந்திய அணியின் கேப்டன் என்ற பொறுப்பில் ரோகித் சர்மா உள்ளார்.

கடும் அழுத்தம்

கடும் அழுத்தம்

கடும் அழுத்தம் காரணமாக விராட் கோலி, தோனி ஆகியோர் ஐபிஎல் கேப்டன் தொடரிலிருந்து விலகிய நிலையில், ரோகித் சர்மா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நீடித்து வருகிறார். இதன் மூலம் ரோகித் சர்மாவுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டு, அவரது பேட்டிங் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

டக்அவுட் சாதனை

டக்அவுட் சாதனை

ஐபிஎல் தொடரில் இதுவரை ரோகித் சர்மா 7 போட்டியில் விளையாடி 114 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். சராசரி 16 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 126 தான் உள்ளது. ரோகித் இதுவரை 41, 10,3,26,28,6,0 என ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் 3 முறை ஒற்றை இலக்கம் மற்றும் 1 முறை டக் அவுட்டும் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை டன் அவுட்டாகிய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார்.

டி20 உலககோப்பை

டி20 உலககோப்பை

இதனால் ரோகித் சர்மாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்களும், சீனியர்களும் அதிரடி காட்டுவதால், அவர்களை டி20 உலக கோப்பை தொடரில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ரோகித் கேப்டன் என்பதால் அவரது இடத்துக்கு ஆபத்து இல்லை என்றாலும், அவருக்கு எதிராக எதிர்ப்பு குரல் ஏழ தொடங்கிவிடும்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

இதே போன்று விராட் கோலியும் ஐபிஎல் தொடரில் சொதப்பி வருகிறார். இதற்கு காரணம் தொடர்ந்து பயோ பபுளில் வீரர்கள் விளையாடுவதால் ஆட்டத் திறன் பாதிக்கப்பட்டு இருக்கும். இதனால் , ரோகித் சர்மா, கோலி ஐபிஎல் தொடரிலிருந்து விலகி, ஓய்வு எடுத்து கொண்டு மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பினால், அது அவர்களுக்கு நன்மையை பயக்கும். அது முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் மும்பை கேப்டன் பதவியிலிருந்தாவது ரோகித் விலக வேண்டும்.

Story first published: Thursday, April 21, 2022, 22:43 [IST]
Other articles published on Apr 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+