
தோல்விக்கான காரணம்
மும்பை அணி ஏலத்தில் பெரிய தொகை கொடுத்து எடுத்த வீரர்களும் சோபிக்க தவறிவிட்டனர். பும்ராவுக்கு ஆதரவாக எந்த ஒரு வீரரும் பந்துவீச்சில் கைகொடுக்கவில்லை. இதன் காரணமாக 5 முறை சாம்பியனான மும்பை அணி, தொடர் தோல்வியில் வென்றுள்ளது. இந்த நிலையில் தொடக்க வீரராக களமிறங்கும் ரோகித்தும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார்.

ரோகித் அறிவிப்பு
பிளேயிங் லெவனில் வெறும் 6 பேட்ஸ்மேன்களை வைத்து களமிறங்கிய காமெடியும் மும்பை இந்தியன்ஸ் அணியில் நடந்தது. இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா, மும்பை அணியை இப்படி இக்கட்டான நிலைக்கு இருப்பதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்று கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தார்.

ஆறுதல் வார்த்தை
மேலும், ஒவ்வொரு ஆட்டத்தையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு, கடந்த காலத்தில் எப்படி இருந்தேனோ, அதே மாதிரி இனி வரும் பாட்டிகளை அணுகுவேன் என்று ரோகித் சர்மா கூறினார். மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சி செய்வோம் என்றும் ரோகித் சர்மா ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

முதல் முறை
இதனிடையே ஐபிஎல் வரலாற்றில் சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 6 போட்டியில் மும்பை அணி முதல் முறையாக தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு முன்பு டெல்லி அணி 2013ஆம் ஆண்டு சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 6 போட்டியிலும், பெங்களூரு அணி 2019ஆம் ஆண்டு முதல் 6 போட்டியிலும், மும்பை தற்போது 6 போட்டியிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











