Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஷான் கிஷனுக்கு மும்பை செய்த துரோகம்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. சச்சின் மகனுக்காக செய்த காரியம்

மும்பை: ஐபிஎல் தொடரில் இஷான் கிஷனுக்கு மும்பை அணி துரோகம் செய்துவிட்டதாக ரசிகர்கள் சிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஐபிஎல் ஏலம் வரலாற்றிலே மும்பை அணி அதிக தொகை கொடுத்து வாங்கிய வீரர் என்றால், அது இஷான் கிஷன் தான். மும்பை அணியின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம்.

ஆனால், சச்சின் டெண்டுல்கர் மகனை புகழ்வதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி செய்த காரியம், இஷான் கிஷனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவால் சிக்கல்

வீடியோவால் சிக்கல்

தங்களுடைய குறையில் நிவர்த்திய செய்ய தான் வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபடுவார்கள். அப்படி இருக்க எப்போதுமே வலைப் பயிற்சியில் பேட்ஸ்மேன் சொதப்பும் போதோ, அவுட்டாகும் போதோ எடுக்கும் வீடியோவை வெளியே விடவே கூடாது.. இது மற்ற அணிக்கு இப்படி தாங்க, இவரை அவுட்டாக்கனும்னு நம்மலே மற்ற அணிக்கு பிளான் போட்டு தருகிற மாதிரி..

 அர்ஜூன் யாக்கர்

அர்ஜூன் யாக்கர்

நேற்று சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை புகழ்வதற்காக, அவர் யாக்கர் வீசி இஷான் கிஷன் போல்ட் ஆகும் வீடியோவை மும்பை அணி வெளியிட்டது. இது சில ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பை தவறு செய்வதாக அப்போதே சிலர் குற்றஞ்சாட்டினர். அதே மாதிரி இந்த வீடியோவை பார்த்து தைங்ஸ்பா.. கல்லால இருந்த காசே அண்ணன் எடுத்துக்கிட்டனு வடிவேலு சொல்ற காமெடி காட்சி வரும் அல்லவா.

 தட்டிதூக்கிய சிஎஸ்கே

தட்டிதூக்கிய சிஎஸ்கே

அதே போல் ஒரு யாக்கர் பந்தை போட்டு இஷான் கிஷனை டக் அவுட்டாக்கியது சிஎஸ்கே. இது மும்பை அணியின் நேற்றைய தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. தமது பேட்டிங் குறையை மும்பை அணியே படம் போட்டு ஊருக்கு காட்டி விட்டதே என்று இஷான் கிஷனும் கடும் விரக்தியில் இருக்கிறார்.

Recommended Video

வீடியோ - சச்சின் மகனா இது..? பயிற்சியில் அசத்தும் அர்ஜூன் டெண்டுல்கர்.. சிஎஸ்கேக்கு எதிராக வாய்ப்பு?
 ரெய்னா மாதிரி ஆயிடுமோ

ரெய்னா மாதிரி ஆயிடுமோ

ஒரு காலத்தில் ரெய்னா அதிரடி மன்னனாக விளங்கினார். ஆனால் அவருக்கு ஷாட் பால் வீசினால் அடிக்க வராது என்பதை அறிந்த எதிரணி வீரர்கள், அவர் வந்தாலே ஷாட் பால் வீசி,ஆட்டமிழக்க செய்தனர். இதனால் அவருடைய கேரியரே க்ளோஸ் ஆகிவிட்டது. தற்போது அதே மாதிரி இஷான் கிஷனுக்கும் ஆகிவிடமோ என்ற அச்சம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Story first published: Friday, April 22, 2022, 18:30 [IST]
Other articles published on Apr 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+