Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பைக்கு தான் வெற்றி வாய்ப்பு.. சிஎஸ்கேவுக்கு உள்ள மிகப்பெரிய சிக்கல்.. இன்று சாதிப்பது கடினம் தான்!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுவது கடினம் தன என தெரியவந்துள்ளது.

33வது லீக் போட்டியாக நடைபெறும் இந்த மோதல் மும்பை DY பாட்டில் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அவமானத்தை இரு அணிகளும் தவிர்க்க முடியும்.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம் மும்பை அணியோ 6 போட்டிகளில் அனைத்திலுமே தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் தோற்றால், ஐபிஎல் வரலாற்றில் பெரும் அவமானத்தை சந்திக்க கூடும்.

 சிஎஸ்கேவின் சிக்கல்

சிஎஸ்கேவின் சிக்கல்

இந்நிலையில் இதில் மும்பை தான் வெற்றி பெறும் எனத் தெரிகிறது. சென்னை அணியை விட, மும்பை ப்ளேயிங் 11 தற்போது நல்ல ஃபார்மில் உள்ளது. இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் பிரேவிஸ், திலக் வர்மா என பேட்டிங் லைன் அப் சிறப்பாக உள்ளது. பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

ரெக்கார்ட்கள்

ரெக்கார்ட்கள்

ஐபிஎல் வரலாற்றில், இரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மும்பை அணி 19 போட்டிகளிலும், சென்னை அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசி 5 போட்டிகளில் கூட மும்பை அணி தான் அதிகபட்சமாக 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இதுவே சிஎஸ்கேவுக்கு பெரும் பதற்றத்தை கொடுக்கும்.

Recommended Video

IPL 2022 : Mumbai Indians vs Chennai Super Kings Match | Oneindia Tamil
முக்கிய பிரச்சினை

முக்கிய பிரச்சினை

இது ஒருபுறம் இருக்க, முக்கியமான போட்டிகளில் மும்பைக்கு எதிராக சிஎஸ்கே தோல்விகளையே கண்டுள்ளது. பதற்றத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று போட்டி நடைபெறும் DY பாட்டில் மைதானத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே இரு அணிகளும் மோதியுள்ளது. இதில் சென்னை அணியின் ஆதிக்கம் தான் இருந்துள்ளது. இது மட்டுமே தற்போதைக்கு ஆறுதலாக உள்ளது.

Story first published: Thursday, April 21, 2022, 11:02 [IST]
Other articles published on Apr 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+