Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை அணியின் பிடிவாதம்.. இன்றாவது முதல் வெற்றியை பெறுமா.. செய்யப்போகும் மாற்றங்கள் என்ன?

மும்பை: சிஎஸ்கேவை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Recommended Video

IPL 2022: Nita Ambani sends a message motivating Mumbai Indians | Oneindia T

ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

மும்பை அணியின் சோகம்

மும்பை அணியின் சோகம்

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்தாண்டு தொடக்கமே சரிவாக இருந்து வருகிறது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலுமே தொடர்ந்து தோல்விகளை மட்டுமே தழுவியுள்ளது. சென்னை அணியும் 4 தோல்வி பெற்றிருந்த சூழலில் நேற்று வெற்றி பெற்றது. இதனால் மும்பையும் இன்று தனது வெற்றி கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ரோகித்தின் முடிவு

ரோகித்தின் முடிவு

இதற்காக அணியில் ரோகித் சர்மா மாற்றம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அது எதுவுமே நடக்காது என தெரிகிறது. ஆர்சிபிக்கு எதிரான கடந்த போட்டியில் பதற்றம் காரணமாக தான் பேட்டிங் வரிசை தடுமாறியது. எனவே அதே ப்ளேயிங் 11 உடன் தான் மும்பை களமிறங்கும் என தெரிகிறது.

அணி மாற்றம்

அணி மாற்றம்

ஓப்பனிங்கில் இஷான் கிஷான் மட்டுமே சோபித்து வருகிறார். ரோகித் சர்மா இன்றாவது நிலைத்து ஆட வேண்டும். டேவால்ட் ப்ரேவிஸுக்கு முதல் ஐபிஎல் என்பதால் தடுமாற்றம் இருந்தது. இன்று அவர் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக உள்ளனர்.

பவுலிங் படை

பவுலிங் படை

பவுலிங் யூனிட்டை பொறுத்தவரையில் செட்டாகிவிட்டனர். ஜஸ்பிரித் பும்ராவுடன் பாசில் தாம்பி, ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் பக்கபலமாய் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் முருகன் அஸ்வின் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் உள்ளனர். ஆல்ரவுண்டர்களாக கெயீரன் பொல்லார்ட் மட்டுமே நம்பிக்கை தருகிறார்.

Story first published: Wednesday, April 13, 2022, 14:56 [IST]
Other articles published on Apr 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+