For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சரித்திரத்தில் எழுதுங்கள்” கேப்டன்சியில் தோனி செய்த பெரும் சாதனைகள்..வியப்பூட்டும் புள்ளிவிவரங்கள்

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியுள்ளார்.

Recommended Video

IPL 2022: Dhoni Steps Down as CSK Captain, Jadeja to lead | OneIndia Tamil

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. முதல் போட்டியில் சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.

இப்படி சிஎஸ்கே போட்டிக்காக அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த சூழலில் தான் அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேப்டன் பதவியில் இருந்து விலகல்

கேப்டன் பதவியில் இருந்து விலகல்

சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.தோனி விலகுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா இந்த சீசன் முதலே செயல்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனியை பொறுத்தவரை சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேனாக விளையாடுவார் எனவும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

தோனியின் முதல் சம்பளம்

தோனியின் முதல் சம்பளம்

கடந்த 2008ம் ஆண்டு தோனியை ரூ. 6 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். அன்றில் இருந்து தற்போது வரை சென்னை அணி ஒரு குடும்பத்தை போன்றும், தோனி அதன் தலைவர் போன்றும் தான் இருந்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு தோனிக்கு காயம் ஏற்பட்ட போது, சில போட்டிகளில் மட்டும் சுரேஷ் ரெய்னா கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

கேப்டன்சி சாதனைகள்

கேப்டன்சி சாதனைகள்

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 204 போட்டிகளில் தோனி கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் 121 போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார். 82 போட்டிகளில் தோல்வியாகும். தோனியின் வெற்றி சதவீதம் 59.60 ஆகும். சென்னை அணிக்காக இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை பெற்றுகொடுத்துள்ளார். மேலும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் 2 முறை பெற்றுக்கொடுத்துள்ளார்.

அதிக முறை ஃபைனல்ஸ்

அதிக முறை ஃபைனல்ஸ்

தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரே ஒருமுறை மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்துள்ளது. இதுவரை 9 முறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 4 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக வயதில் கோப்பை வென்று கொடுத்தவர் தோனியே ஆகும்.

 ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

கூலான கேப்டன்சி, எந்தவித சூழலில் இருந்து அணியை காப்பாற்றி வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வது என தோனியின் கேப்டன்சி திறமைக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளன. அவர்கள் இனி தோனியின் கேப்டன்சியை பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனினும் அவர் ஒரு பேட்ஸ்மேனாக தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 24, 2022, 15:56 [IST]
Other articles published on Mar 24, 2022
English summary
Full captaincy records of MS. Dhoni IPL History
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+