Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருமே இல்லையா பரமா.. ரோகித் சர்மாவின் பரிதாப நிலை.. ஐபிஎல் 2வது போட்டி.. மும்பை ப்ளேயிங் 11 இதோ!

மும்பை: ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே ரோகித் சர்மாவுக்கு பரிதாபமான நிலை உருவாகியுள்ளது.

இன்று நடைபெறும் 2வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறவிருக்கிறது.

மும்பை பரிதாபம்

மும்பை பரிதாபம்

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் சற்று புதுவிதமாக இருக்கப்போகிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்ட்யா, டிகாக், க்ருணால் பாண்ட்யா, ட்ரெண்ட் போல்ட் ஆகிய முக்கிய வீரர்கள் இல்லை. அனைத்து துறையிலும் புதிய ஒரு படையுடன் ரோகித் சர்மா களமிறங்க வேண்டிய சூழலில் உள்ளார். புதிய ப்ளேயிங் 11ம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிரடி ஓப்பனிங்

அதிரடி ஓப்பனிங்

ஓப்பனிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் களமிறங்குவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. சூர்யகுமார் யாதவ் இன்னும் காயத்தில் இருந்து மீளாததால் திலக் வெர்மா அறிமுகமாகவுள்ளார். இடது கை பேட்ஸ்மேனான திலக் வெர்மா டி20 கிரிக்கெட்டில் 143 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார்.

புதிய மிடில் ஆர்டர்

புதிய மிடில் ஆர்டர்

2வது விக்கெட்டிற்கு சிங்கப்பூர் பேட்ஸ்மேன் டிம் டேவிட் இடம்பெற்றுள்ளார். வலது கை பவர் ஹிட்டர் மற்றும் பவுலிங் என அட்டகாசமான ஃபார்மில் டிம் டேவிட் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அனுபவம் இல்லாத இவர், சர்வதேச டி20ல் 11 போட்டிகளில் 429 ரன்களை குவித்துள்ளார். இவரை தொடர்ந்து மிடில் ஆர்டரை காப்பாற்ற சீனியர் ப்ளேயர் கெயிரன் பொல்லார்ட் இருக்கிறார்.

ஹர்திக் பாண்ட்யாவின் இடம்

ஹர்திக் பாண்ட்யாவின் இடம்

லோயர் ஆர்டரில் டேனியல் சாம்ஸ் இடம்பெற்றுள்ளார். வலது கை பேட்டிங் மற்றும் இடது கை வேகப்பந்துவீச்சு என அசத்தக்கூடியவர். இதற்கு முன்னர் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்புவதற்காக டேனியல் சாம்ஸை கொண்டு வந்துள்ளனர்.

 சுழற்பந்து வீச்சாளர்கள்

சுழற்பந்து வீச்சாளர்கள்

இவரை தொடர்ந்து இடது கை ஸ்பின்னரான சஞ்சய் யாதவ் அறிமுகமாகவுள்ளார்.

அணியின் முக்கிய ஸ்பின்னராக மயங்க் மார்கண்டே விளையாடவுள்ளார். மும்பை அணியில் தான் இவர் அறிமுகமானார். மார்கண்டேவின் எகானமி ரேட் 8 ரன்களாக இருந்தாலும் முக்கிய நேரத்தில் விக்கெட் எடுத்துக் கொடுக்க கூடியவர்.

பவுலிங் படை

பவுலிங் படை

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் ஐபிஎல் தொடரில் அனுபவமுள்ள ஜெய்தேவ் உனத்கட் வாய்ப்பு பெறவுள்ளார். இவர் ஏற்கனவே டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான், புனே, ஆர்சிபி என பல அணிகளில் விளையாடியுள்ளார். முதன்மை பவுலர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டைமல் மில்ஸ் விளையாடுகின்றனர்.

மும்பை ப்ளேயிங் 11

மும்பை ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, இஷான் கிஷான், திலக் வெர்மா, டிம் டேவிட், கெயிரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், சஞ்சய் யாதவ், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ்

Story first published: Sunday, March 27, 2022, 15:02 [IST]
Other articles published on Mar 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+