Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை அணியின் முக்கிய வீரர் விலகல்.. 37 வயதில் மாற்று வீரர் தேர்வு.. சிஎஸ்கேவுக்கு சவால் தான்!!

சென்னை அணியை தொடர்ந்து மும்பை அணியில் இருந்து முக்கிய வீரர் ஒருவர் திடீரென விலகியுள்ளார்.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறுகிறது.

மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

புள்ளிப்பட்டியலில் மும்பை அணி ஒரு வெற்றி கூட பெறாமல் 10வது இடத்திலும், சிஎஸ்கே அணி ஒரே ஒரு வெற்றியுடன் 9வது இடத்திலும் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. இதற்காக வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

சிஎஸ்கேவுக்கு பின்னடைவு

சிஎஸ்கேவுக்கு பின்னடைவு

இந்த சூழலில் தான் சென்னை அணியில் இருந்து நட்சத்திர வீரர் டெவோன் கான்வே தீடீரென விலகினார். திருமணம் காரணமாக அவர் அடுத்த 3 வாரங்களுக்கு வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே தீபக் சஹாரும் இல்லாததால் பின்னடைவாக பார்க்கப்பட்டு வந்தது.

நட்சத்திர வீரர் விலகல்

நட்சத்திர வீரர் விலகல்

இந்நிலையில் மும்பை அணியில் இருந்தும் முக்கிய வீரர் விலகியுள்ளார். ப்ளேயிங் 11ல் இடம்பெற்று வந்த இங்கிலாந்து பவுலர் டைமல் மில்ஸ் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். இதனால் அவருக்கு மாற்றாக யாரை களமிறக்குவது என்ற குழப்பத்தில் மும்பை அணி நிர்வாகம் இருந்து வந்தது.

மாற்று வீரர் யார்

மாற்று வீரர் யார்

இறுதியில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஐபிஎல்-ல் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ஸ்டூவர்ட் பின்னியை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளனர். இவர் வர்ணனையின்போது குவாரண்டைனில் இருந்துதான் பணி செய்து வந்தார். இதனால், மும்பை அணியில் நேரடியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

Story first published: Thursday, April 21, 2022, 12:30 [IST]
Other articles published on Apr 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+