Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடுனது 1 மேட்ச், அடிச்சது 1 ரன்.. ஆனாலும் ரூ.8.25 கோடிக்கு ஏலம்.. பிரமிக்க வைத்த மும்பை அணி வீரர்!

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ள வீரர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் மெகா ஏலம், கடந்த 2 நாட்களாக பரபரப்பாக நடந்து முடிந்தது.

இதில் ஒவ்வொரு அணியும் முன்னணி வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் கலந்த படையை உருவாக்கியுள்ளது.

மும்பை அணி தேர்வு

மும்பை அணி தேர்வு

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணித் அதிக தொகை கொடுத்து அனுபவம் இல்லாத வீரரை எடுத்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியம் தந்துள்ளது. சிங்கப்பூர் அணியை சேர்ந்த டிம் டேவிட் எனும் இளம் வீரரை தான் அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே இவர் யார், அப்படி என்ன செய்திருக்கிறார், இவரின் சமீபத்தில் ஃபார்ம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

டிம் டேவிட் யார்

டிம் டேவிட் யார்

டிம் டேவிட் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். அந்த நாட்டு அணிக்காக இதுவரை 11 சர்வதேச டி20 போட்டிகளில் டிம் டேவிட் விளையாடி 429 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 47.67 ரன்கள் ஆகும். மேலும் அவரின் ஸ்டரைக் ரேட் 157.52 ஆகும். சிங்கப்பூர் அணிக்காக நேபால், ஹாங்காங், உள்ளிட்ட அணிகளை எதிர்த்து விளையாடியுள்ளார்.

வாய்ப்புக்காக காத்திருப்பு

வாய்ப்புக்காக காத்திருப்பு

சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு குடிபெயர்ந்த டிம் டேவிட், அங்கு உள்நாட்டு தொடரான பிக் பேஸில் அதிரடி காட்டி கவனம் பெற்றார். கடந்த 2020 - 2021ம் ஆண்டுக்கான பிபிஎல் தொடரில் அவரின் அதிரடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதன் காரணமாகவே அவர் ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. டிம் டேவிட்டும் வாய்ப்புக்காக காத்துக்கொண்டுள்ளார்.

புள்ளிப்பட்டியல்

புள்ளிப்பட்டியல்

இந்த சூழலில் தான் மும்பை அணிக்கு வந்துள்ளார். ஆனால் அவருக்கு ஐபிஎல் தொடரில் பெரிய அனுபவம் இல்லை. கடந்தாண்டு ஆர்சிபி அணிக்காக 2ம் பகுதியில் சேர்க்கப்பட்டார். ஒரே ஒரு போட்டியில் வாய்ப்பு பெற்று ஒரே ஒரு ரன்னை மட்டுமே எடுத்தார். ஆனால் அவரின் மீது முழு நம்பிக்கை வைத்து மும்பை அணி ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. மிடில் ஆர்டரில் அவர் நிச்சயம் இருப்பார் எனத் தெரிகிறது.

Story first published: Monday, February 14, 2022, 18:38 [IST]
Other articles published on Feb 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+