Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இன்று சரவெடி உறுதி” ஒரே ஒரு வீரருக்காக அஞ்சும் கொல்கத்தா அணி.. வாயைப் பிளக்க செய்த விஷயம் - விவரம்

மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இன்று மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ரோகித் சர்மா மட்டுமே முக்கிய காரணமாக அமையலாம்.

ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் தனது வெற்றி கணக்கை தொடங்கவே இல்லை. முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

சிக்கலில் மும்பை அணி

சிக்கலில் மும்பை அணி

டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால் கொல்கத்தா அணி, இதுவரை ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலிலும் 2வது இடத்தில் உள்ளது.

ரோகித் ஒருவரே போதும்

ரோகித் ஒருவரே போதும்

இந்நிலையில் பலமான கொல்கத்தா அணியை வீழ்த்த ரோகித் என்ற ஒற்றை ஆயுதம் போதுமானதாக அமையும். ஏனென்றால் கொல்கத்தா அணிக்கு சிம்ம சொப்பனமாக ரோகித் திகழ்ந்து வருகிறார். அந்த அணிக்கு எதிராக இதுவரை 29 போட்டிகளில் விளையாடி 1015 ரன்களை குவித்துள்ளார். ரோகித்தின் சராசரி மட்டுமே 46.14 என உள்ளது. ஒரு அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கும் மேல் அடித்த ஒரே வீரர் ரோகித் சர்மா மட்டும் தான்.

சுவாரஸ்ய செய்தி

சுவாரஸ்ய செய்தி

எப்போதும் ஓப்பனிங் ஆடும் ரோகித் கொல்கத்தா அணிக்கு எதிரான 29 போட்டிகளில் 7 முறை நாட் அவுட்டாக இருந்து போட்டியை முடித்துக் கொடுத்துள்ளார். இதில் 7 முறையுமே அரைசதம் கடந்துள்ளார். அந்த அணியின் பவுலர்கள் எப்படி வீசினாலும், சிக்ஸர் அடிப்பேன் என்பது போன்ற ஸ்ட்ரைக் ரேட்டை தன் வசம் வைத்துள்ளார்.

புனேவில் ரோகித்

புனேவில் ரோகித்

இன்றைய போட்டி நடைபெறும் புனே மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இந்த களத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த இரண்டிலும் ஆட்ட நாயகன் ரோகித் சர்மா தான். தற்போதும் அந்த ஆடுகளத்தின் தன்மை பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளதால் ரோகித்தின் அதிரடியை காண அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, April 6, 2022, 20:37 [IST]
Other articles published on Apr 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+