For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வளர்த்த கடா மார்பில் முட்டுது.. மும்பை இந்தியன்ஸ் எடுத்த தவறான முடிவு.. மிரட்டும் முன்னாள் வீரர்கள்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் ஏமாற்றத்துடனே தொடரை தொடங்கியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தின் போது இனி எந்த வீரர்களை எல்லாம் வேண்டாம் என்று மும்பை இந்தியன்ஸ் அணி விட்டதோ அவர்கள் எல்லாம் நடப்பு சீசனில் மிரட்டுகிறார்கள்.

4 நாட்களே ஆன நிலையில் முன்னாள் பால்டன்ஸ் மற்ற அணிகளுக்காக அடித்ததை தற்போது காணலாம்.

பவுல்ட்

பவுல்ட்

மும்பை அணியின் போர் வாளாக திகழ்ந்தவர் டிரெண்ட் பவுல்ட் பும்ராவுடன் புவுல்ட் கூட்டணி போட்டு எதிரணியை கதி கலங்க செய்தார். எனினும் பவுல்ட் கடந்த சீசனில் சரியாக சோபிக்கவில்லை, இதனால் அவரை கிழற்றிவிட்டு, காயத்தில் இருந்த ஜோப்ரா ஆர்ச்சரை மும்பை அணி வாங்கியது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு சென்ற பவுல்ட், நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர் வீசி 23 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

குர்னல் பாண்டியா

குர்னல் பாண்டியா

இதே போன்று மும்பை அணியின் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான குர்னல் பாண்டியாவையும் மும்பை அணி ஏலத்தில் எடுக்காமல் மற்ற அணியிடம் கோட்டைவிட்டது. ஆனால் அவர் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் 4 ஓவர் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியதுடன் பேட்டிங்கில் 13 பந்துகளில் 21 ரன்களை விளாசினார்.

ராகுல் சாஹர்

ராகுல் சாஹர்

மும்பை அணி மெகா ஏலத்தின் போது சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சாஹரை கைவிட்டு, புதிய வீரர்களை தேர்ந்து எடுத்தது. ஆனால் ராகுல் சாஹரோ பஞ்சாப் அணிக்காக களமிறங்கி, 4 ஓவர் வீசி 22 ரன்களை விட்டு கொடுத்து 1 விக்கெட் மட்டுமே எடுத்தார்.தற்போது அவர் மும்பை அணியில் இருந்திருந்தால், ரோகித் சர்மாவுக்கு பக்க பலமாக இருந்திருக்கும்.

Recommended Video

IPL 2022: 3 Changes RCB can make to Win against KKR | OneIndia Tamil
ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக விளங்கியவர் ஹர்திக் பாண்டியா. ஆனால் அவரை மும்பை அணி தாரை வார்த்தது. தற்போது குஜராத் அணியின் கேப்டனாக தலைமை தாங்கிய ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 33 ரன்கள் ரன்கள் விளாசினார். இதனால் நாம் விட்ட வீரர்கள் எல்லாம், தற்போது சிறப்பாக விளையாடுகிறார்கள் என்ற வேதனையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் உள்ளனர்.

Story first published: Wednesday, March 30, 2022, 19:18 [IST]
Other articles published on Mar 30, 2022
English summary
IPL 2022- Mumbai Indians EX Players Shining for other teams மும்பை இந்தியன்ஸ் எடுத்த தவறான முடிவு.. மிரட்டும் முன்னாள் வீரர்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+