அனுபவ வீரருக்கு இடமில்லை.. மும்பை vs டெல்லி மோதல்.. முற்றிலும் புது படையுடன் களமிறங்கிய ரோகித் சர்மா
மும்பை: ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
நேற்றைய போட்டி மும்பை வான்கடேவில் நடைபெற்ற நிலையில் இன்று பிராபோர்ன் மைதானத்தில் இப்போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இப்போட்டியில் முற்றிலும் மாறுபட்ட ப்ளேயிங் 11 உடன் இரண்டு அணிகளுமே களமிறங்கியுள்ளன.

மும்பை ஓப்பனிங்
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில் 5 வீரர்கள் அந்த அணிக்காக அறிமுகமாகியுள்ளனர். ஓப்பனிங்கில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் களமிறங்கியுள்ளனர். சூர்யகுமார் யாதவ் இன்னும் உடற்தகுதி பெறாததால், முதல் விக்கெட்டிற்கு திலக் வெர்மா என்ற அறிமுக வீரர் களமிறங்குகிறார்.

நடுவரிசை
மிடில் ஆர்டரில் சிங்கப்பூரின் அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் வாய்ப்பு பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் அனுபவம் இல்லாத இவர், சர்வதேச டி20ல் 11 போட்டிகளில் 429 ரன்களை குவித்துள்ளார். இவரை தொடர்ந்து அணியின் அன்மோல் ப்ரீத் சிங் மற்றும் கெயீரன் பொல்லார்ட் ஆகியோர் பேட்டிங்கிற்கு உள்ளனர்.

ஹர்திக்கின் இடம்
லோயர் ஆர்டரில் டேனியல் சாம்ஸ் இடம்பெற்றுள்ளார். வலது கை பேட்டிங் மற்றும் இடது கை வேகப்பந்துவீச்சு என அசத்தக்கூடியவர். இதற்கு முன்னர் டெல்லி அணிக்காக விளையாடி வந்த நிலையில், தற்போது அந்த அணியை எதிர்த்து நிற்கிறார். ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்புவதற்காக டேனியல் சாம்ஸ் சரியாக இருப்பார்.

சுழற்பந்துவீச்சாளர்கள்
சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் தமிழக வீரர் முருகன் அஸ்வினுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அனுபவம் உள்ளதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மற்றொரு ஸ்பின்னராக அன்மோல் ப்ரீத் சிங்-கை பயன்படுத்த ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளார்.

பவுலிங் படை
வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் ஐபிஎல்-ல் பல அணிகளில் விளையாடிய அனுபவமுள்ள ஜெய்தேவ் உனத்கட் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு மாற்றாக பாசில் தாம்பி சேர்க்கப்பட்டுள்ளார். முதன்மை பவுலர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டைமல் மில்ஸ் விளையாடுகின்றனர்.
Recommended Video

மும்பை ப்ளேயிங் 11
ரோகித் சர்மா, இஷான் கிஷான், திலக் வெர்மா, டிம் டேவிட், அன்மோல் ப்ரீத் சிங், கெயிரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ், முருகன் அஸ்வின், பாசில் தாம்பி ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ்


Click it and Unblock the Notifications