Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் 7 முறை தான்.. மும்பை அணியின் சக்ஸஸ் ஃபார்முலா.. கொல்கத்தாவை வறுத்தெடுக்க வாய்ப்புகள் அதிகம்!

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி தனது ருத்ர தாண்டவத்தை காட்டுவதற்கான வாய்ப்புகள் கூடி வந்துள்ளன.

புனேவில் நடைபெறவுள்ள 14வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீது தான் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் முதல் 2 போட்டிகளிலுமே அந்த அணி தோல்வியடைந்துள்ளது.

மும்பைக்கு சிக்கல்

மும்பைக்கு சிக்கல்

5 முறை சாம்பியனான மும்பை அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மற்றொரு புறம் கொல்கத்தா அணி, இதுவரை ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. ஆர்சிபிக்கு எதிராக 128 ரன்களை டிஃபெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்ய விஷயங்கள்

சுவாரஸ்ய விஷயங்கள்

ஆனால் இன்று மும்பைக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக தெரிகிறது. ஏனென்றால், ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 22 முறை மும்பை மட்டுமே வென்றுள்ளது. கொல்கத்தா 7 முறை தான் வெற்றி கண்டுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கடைசியாக விளையாடிய 14 போட்டிகளில் 12 முறை கொல்கத்தா தோல்வி மட்டுமே பெற்றுள்ளது.

மைதானத்தின் ஸ்பெஷல்

மைதானத்தின் ஸ்பெஷல்

இன்றைய போட்டி நடைபெறும் புனே மைதானம் சற்று வித்தியாசமானதாக அமைந்துள்ளது. அதாவது இரவில் பனிப்பொழிவுடன் நடைபெற்றாலும், இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி தான் வெற்றி பெறுகிறது. இந்த சீசனில் இதுவரை நடந்த 2 போட்டிகளின் முடிவுகளும் அதுவே ஆகும். முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரியாக இங்கு 150+ வருகிறது. இதுவே 2வது இன்னிங்ஸ் ஆடும் அணி சராசரியாக 120+ மட்டுமே எடுக்கிறது.

மும்பைக்கு பலம்

மும்பைக்கு பலம்

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 முறை தனது முதல் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனினும் அதில் இருந்து கம்பேக் கொடுத்து வந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது இன்று அதிகரிக்காமல் இருக்க ரோகித் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார். மேலும் ப்ளேயிங் 11ம் அதற்கு தகுந்தார் போலவே தயார் செய்து வருகிறார்.

Story first published: Wednesday, April 6, 2022, 20:36 [IST]
Other articles published on Apr 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+