Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த சீசனில் 3 பேருக்கு கல்தா.. மும்பை இந்தியன்ஸ் எடுத்த அதிரடி முடிவு.. ரோகித் சர்மா திட்டம்

மும்பை: ஐபிஎல் தொடரின் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் 9 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இதனால் அடுத்த சீசனுக்கு தயாராகும் வகையில், அணியை தேர்வு செய்யும் படி ஆகாண் அம்பானி அணியின் நிர்வாகத்துக்கு பச்சை சிக்னல் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் தான் இப்போதே மும்பை அணி சில வீரர்களை மாற்றியுள்ளது. இதனால் அடுத்த சீசனில் சில வீரர்கள் மும்பை அணியில் இருக்க மாட்டார்கள்.

ரமன்தீப் சிங்

ரமன்தீப் சிங்

மும்பை அணியின் இளம் வீரர் ரமன்தீப் சிங் நடப்பு சீசனில் 2 போட்டியில் விளையாடி சொதப்பினார். அதில் 12 பந்துக்கு 6 ரன்கள், 16 பந்துக்கு 12 ரன்கள் என்ற ஸ்கோரையே ரமன்தீப் சிங் எடுத்தார். ஃபில்டிங்கும் மோசமாக செயல்பட்டார். எஞ்சிய போட்டியில் பெரிய அளவில் சாதித்தால் மட்டுமே அவர் அடுத்த சீசனில் விளையாடுவார்.

டைமல் மில்ஸ்

டைமல் மில்ஸ்

மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் டைமல் மில்ஸ் 5 போட்டியில் 6 விக்கெட் எடுத்துள்ளார். எக்னாமி 11 என வைத்துள்ளார். இவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தாம் முழு உடல் தகுதியை பெற்றேன் என்று கூறி பதிவிட்டு இருந்தார். ஆனால், மும்பை அணி காயம் அவருக்கு குணமாகவில்லை என்று கூறி, அணியிலிருந்து நீக்கி அவருக்கு பதிலாக ஸ்டப்ஸை சேர்த்துள்ளது.

பொலார்ட்

பொலார்ட்

நடப்பு சீசனில் மும்பை அணி பெரிய ஏமாற்றமே பொலார்ட் தான். 11 போட்டியில் விளையாடி 144 ரன்களை எடுத்துள்ளனர். சராசரி வெறும் 14 ரன்கள் மட்டும் வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 108. பொலார்ட் நீண்ட காலமாக மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு வழியனுப்பிவிட்டு பிரவீஸ் உள்ளிட்ட வீரரை அந்த இடத்துக்கு மும்பை அணி பயன்படுத்தலாம்.

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

என்னடா இஷான் கிஷன்னா என ஷாக் ஆகிட வேண்டாம். இஷான் கிஷனுக்கு 15 கோடிக்கு மேல் கொடுத்து தப்பு பண்ணிட்டோமோ என நினைக்கும் மும்பை அவரை வெளியே அனுப்பிவிட்டு, மீண்டும் மினி ஏலத்தில் குறைந்த விலையில் அவரை எடுக்கலாம் என திட்டமிட்டுள்ளது.

Story first published: Tuesday, May 10, 2022, 20:52 [IST]
Other articles published on May 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+