Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரண்டே இரண்டு நொடி தான்.. மும்பையின் தலையெழுத்தை மாற்றிய தருணம்.. கடுப்பான ரோகித் சர்மா!!

மும்பை: இரண்டே இரண்டு நொடிகளில் மும்பை இந்தியன்ஸின் முதல் வெற்றிகான கனவு கலைந்துப் போனது.

ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் இன்னிங்ஸ்

பஞ்சாப் இன்னிங்ஸ்

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஓப்பனிங்கே அட்டகாசமாக அமைந்தது. கேப்டன் மயங்க் அகர்வால் 52 ரன்கள், ஷிகர் தவான் 70 ரன்கள் என குவித்தனர். இதன் பின்னர் வந்த வீரர்கள் அதிரடி காட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது.

வெற்றி பாதை

வெற்றி பாதை

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் இஷான் கிஷான் 3 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி தந்தார். மிடில் ஆர்டரில் டேவால்ட் பிரேவிஸ் 49 ரன்கள், திலக் வர்மா 36 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 43 ரன்கள் என சிறப்பாக ஆடிய போதும், 20 ஓவர்களில் 186 ரன்களை மட்டும் தான் அடித்து தோல்வியை சந்தித்தது. மும்பை அணியின் வெற்றியை பறித்தது 2 நொடிகள் மட்டும் தான்.

முக்கிய தவறு

முக்கிய தவறு

மிடில் ஆர்டரில் திலக் வர்மா 20 பந்துகளில் 36 ரன்களை விளாசி மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். 13வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தை சூர்யகுமார் அருகிலேயே அடித்தார். இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் ரன் ஓடாமல் நின்றுவிட, எதிரில் இருந்த திலக் வர்மா அவசரப்பட்டு, சிங்கிள் எடுக்க ஓடினார். இதனால் பரிதாபமாக ரன் அவுட்டாகி வெளியேறினர்.

Recommended Video

IPL 2022: 5 Mistakes by Mumbai Indians | Hardik Pandya | Jofra Archer | OneIndia Tamil
2வது தவறு

2வது தவறு

இதே போல சீரான வேகத்தில் ரன் உயர்த்தி வந்த கெயீரன் பொல்லார்ட், அதிரடிக்காக பேட்டை சுழற்ற தொடங்கினார். 17வது ஓவரில் வைபவ் அரோரா வீசிய பந்தை அடித்துவிட்டு, ரன் ஓடினார். அப்போது பந்தை கவனிக்காமல் ஒரு நொடியில் 2வது ரன் எடுக்க முயல, தேவையின்றி விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் மும்பை அணி ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்தது.

Story first published: Thursday, April 14, 2022, 11:21 [IST]
Other articles published on Apr 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+