பொலார்டுக்கு கெட் அவுட் - ஆலனுக்கு கட் அவுட்.. மும்பை எடுத்த அதிரடி முடிவு.. வருகிறது அதிரடி மாற்றம்
மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் மும்பை அணி கடும் சோகத்தில் உள்ளது. விளையாடிய ஒரு போட்டியிலும் வெல்லாததால், கடைசி இடத்தில் உள்ளது.
இனி மேல் பிளே ஆப் செல்லும் வாய்ப்பு மும்பைக்கு 99.98 சதவீதம் வாய்ப்பு கிடையாது. இதனால், சீசனை முடிக்கும் போது சிறப்பாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மும்பை உள்ளது.
வரும் 30ஆம் தேதி ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

பேட்டிங் மாற்றம்
அதன் படி, ரோகித் சர்மாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கும் இஷான் கிஷன் மீண்டும் நடுவரிசையில் விளையாட உள்ளார். ரோகித்துக்கு ஜோடியாக திலக் வர்மாவை மும்பை களமிறக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட், மும்பை அணியின் நடுவரிசையில் களமிறங்குகிறார்.

பொலார்ட் நீக்கம்?
மும்பை அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்த பொலார்டை கழற்றிவிட, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொலார்டு பழைய ஆட்டத்தை வெளிப்படுத்துவது இல்லை. அப்படி வெளிப்படுத்தினாலும் அது ஆடிக்கு ஒரு முறை, அம்மாவசைக்கு ஒரு முறை தான் என்பது போல் உள்ளது. இதனால் அவருக்கு சிறிது ஓய்வு வழங்கி, பின்னர் பேட்டிங் வரிசையில் 5வது இடத்தில் களமிறக்கப்பட உள்ளார்.

ஃபெபியன் ஆலன்
இதனால், பொலார்ட் இல்லாத போட்டியில் அவருக்குபதிலாக ஃபெபியன் ஆலனுக்கு வாய்ப்பு கொடுத்து, மெருகேற்ற மும்பை அணி முடிவு எடுத்துள்ளது. அதற்கு தகுந்தால் போல் ஃபெபியன் ஆலன் பியிற்சி எடுக்கும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது இதே போன்று சச்சின் மகனுக்கும் எதாவது ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம்.

சிஎஸ்கே வழியில் மும்பை
இதே போன்று தமிழக ஆல்ரவுண்டர் சுழற்பந்துவீச்சாளரான சஞ்சய் யாதவும் மும்பை அணியில் வாய்ப்பு கிடைக்கலாம். எப்படி 2020ஆம் ஆண்டு பிளே ஆப் வாய்ப்பு பறிபோன பிறகு சிஎஸ்கே புதிய முயற்சியை எடுத்து, அடுத்த சீசனில் சிறப்பாக விளையாடியதோ, அதே போன்ற யுத்தியை மும்பை இந்தியன்ஸ் அணியும் கடைபிடிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications