Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை அணிக்கு இன்னும் ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கு.. கதை இன்னும் முடியல.. புள்ளிவிவரங்கள் இதோ!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இனி ப்ளே ஆஃப் வாய்ப்பு உள்ளதா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஐபிஎல் தொடரின் நேற்றை ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் மும்பை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வெற்றிக்கு அருகில் வரை சென்றும், கடைசி நேரத்தில் தோனியின் அதிரடியால் தோல்வியை சந்தித்தது.

மும்பை பரிதாபம்

மும்பை பரிதாபம்

இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் மும்பை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மிக மோசமான அணி என்ற பெயரை மும்பை வாங்கியுள்ளது. இதற்கு முன்பு வரை டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகள் தொடர்ச்சியாக 6 தோல்விகளை பெற்றிருந்தது. அதனை தற்போது மும்பை முந்தியுள்ளது.

ப்ளே ஆஃப் வாய்ப்பு என்ன

ப்ளே ஆஃப் வாய்ப்பு என்ன

இந்த மோசமான தோல்விக்கு பிறகு மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சில வாய்ப்புகள் உள்ளது. அதாவது ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தது 14 புள்ளிகள் எடுக்க வேண்டும். அந்தவகையில் மும்பை அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதம் இருப்பதால் அனைத்திலும் வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் வந்துவிடும்.

 என்ன சிக்கல் உள்ளது

என்ன சிக்கல் உள்ளது

ஆனால் அது நடந்தாலும் ஒரு சிக்கல் உள்ளது. புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்காக மற்ற அணிகளும் 14 புள்ளிகளுடன் இருக்க வேண்டும். அதில் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி ஒருபடி முன் இருந்தால், ப்ளே ஆஃப்-க்கு செல்லும். தற்போது இருக்கும் சூழலை பார்த்தால் அப்படி நடக்குமா என்பது சந்தேகமாக தான் உள்ளது.

உதாரணம் பஞ்சாப் அணி தான்

உதாரணம் பஞ்சாப் அணி தான்

கடைசியாக 2011ம் ஆண்டு 10 அணிகள் தலா 14 லீக் போட்டிகளை விளையாடியது. அதில் பஞ்சாப் அணி 14 புள்ளிகளை பெற்ற போதும், ரன் ரேட் அடிப்படையில் 5வது இடத்தை பெற்று ப்ளே ஆஃப்-க்கு தகுதிப் பெறவில்லை. ஒருவேளை மும்பை அணிக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அனைத்து விஷயங்களும் ஒருசேர நடந்து ப்ளே ஆஃப் செல்லலாம்.

Story first published: Friday, April 22, 2022, 16:25 [IST]
Other articles published on Apr 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+