Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அம்பயரால் அடித்த அதிர்ஷ்டம்.. மும்பை அணிக்கு முதல் வெற்றி.. எப்படி தெரியுமா??

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஒரு அதிர்ஷ்டத்தால் மும்பை அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

இரு அணிகளும் மோதிய 44வது லீக் போட்டி மும்பை DY பாட்டில் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு எதிர்பார்த்தபடி பேட்டிங் அமையவில்லை.

 பேட்டிங் சொதப்பல்

பேட்டிங் சொதப்பல்

தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் 15 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 16 ரன்கள், டேர்லி மிட்செல் 17 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஏமாற்றினர். மறுமுணையில் வழக்கம் போல அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர் 52 பந்துகளில் 67 ரன்களை குவித்துவிட்டு வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை குவித்தது.

ரோகித் ஏமாற்றம்

ரோகித் ஏமாற்றம்

159 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஏமாற்றினார். அஸ்வின் வீசிய பந்தில் 2 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷான் 26 ரன்களுக்கு கேட்ச் கொடுத்தார். இதனால் 41 ரன்களுக்கெல்லாம் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஆட்டத்தின் திருப்புமுணை

ஆட்டத்தின் திருப்புமுணை

இதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி அணியை மீட்டுக்கொண்டு வந்தனர். எனினும் இந்த பார்ட்னர்ஷிப் தொடக்கத்திலேயே முறிந்திருக்க வேண்டியது. ஆனால் அதிர்ஷ்டத்தால் தப்பித்தனர். ஆட்டத்தின் 8வது ஓவரில் சாஹல் வீசிய பந்தை சூர்யகுமார் யாதவ் அடிக்க முயன்ற போது எல்பிடபள்யூ ஆனார். எனினும் இதற்கு நாட் அவுட் எனக்கொடுக்கப்பட்டது.

காப்பாற்றிய அம்பயர்

காப்பாற்றிய அம்பயர்

அவுட் என்பதில் உறுதியாக இருந்த யுவேந்திர சாஹல் 3வது நடுவருக்கு முறையிட்டார். அதில் பந்து ஸ்டம்பிற்கு நெருக்கமாக பட்டதால் அம்பயர்ஸ் காலாக மாறி சூர்யகுமார் தப்பித்தார். அப்போது அவர் 27 ரன்கள் தான் அடித்திருந்தார். இந்த ஒரு விக்கெட் தவறியதால் ராஜஸ்தான் அணிக்கு பெரும் சரிவாக சென்றது.

கடைசி ஓவர் பரபரப்பு

கடைசி ஓவர் பரபரப்பு

அந்த பந்தில் இருந்து பார்ட்னர்ஷிப் வளர்ந்த சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 51 ரன்களையும், திலக் வர்மா 35 ரன்களும் குவித்து வெளியேறினர். இவர்களால் 41 - 2 என இருந்த ஸ்கோர் 122- 3 என மாறியது. இதன் பின்னர் வந்த டிம் டேவிட் சற்று அதிரடி காட்ட கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது.

முதல் வெற்றி பதிவு

முதல் வெற்றி பதிவு

முதல் பந்திலேயே பொல்லார்ட் அவுட்டாக, பதற்றம் உருவானது. எனினும் அடுத்து வந்த டேனியல் சாம்ஸ் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். 19.2 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த சீசனில் மும்பை அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

Story first published: Saturday, April 30, 2022, 23:55 [IST]
Other articles published on Apr 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+