Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடப்பாவமே.. ஒரு ரன் அடிக்க ரூ.4.7 லட்சம் கொடுத்த மும்பை அணி.. இஷான் கிஷனுக்கு அடிச்ச லக்

மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்றவர் இஷான் கிஷன்.

Recommended Video

IPL 2022 CSK vs MI: முரட்டுத்தனமான மோதல்! Predictable 11 என்ன? | OneIndia Tamil

மும்பை அணி சுமார் 15 கோடியே 25 லட்சத்தை கொடுத்து இஷான் கிஷனை ஏலத்தில் மும்பை அணி எடுத்தது.

ஆனால், இஷான் கிஷனோ மும்பை அணியின் நம்பிக்கையை குலைத்து வீணடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

வீணடித்த அம்பானி

வீணடித்த அம்பானி

இஷான் கிஷனுக்கு செலவு செய்த பணத்தில் ஒரு 3 நல்ல வீரர்களை வாங்கி விளையாட விட்டு இருக்கலாம். சாஹல், குர்னல், ஆகியோரை மும்பை அணியே இந்த பணத்தை வைத்து எடுத்திருக்கலாம். இந்த குதிரை ஓடும் என நம்பி, அம்பானி பணம் கட்ட, அந்த குதிரையால் நெருக்கடி காரணமாக நினைத்த இலக்கை எட்டமுடியவில்லை.

ஒரு ரன்னுக்கு 4.7 லட்சம்

ஒரு ரன்னுக்கு 4.7 லட்சம்

மும்பை அணிக்கு தற்போதைய சீசனில் 11 போட்டியில் விளையாடியுள்ள இஷான் கிஷன், 321 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரு போட்டியில் மட்டும் இஷான் அதிகபட்சமாக 81 ரன்கள் அடித்தார். அதனை நீக்கிவிட்டால் இஷான் இந்த சீசனில் மோசமாக செயல்பட்டுள்ளது தெரியவரும். சொல்லபோனால் இஷான் கிஷன ஒரு ரன் அடித்த மும்பை 4.7 லட்சத்தை ஊதியமாக கொடுத்துள்ளது.

நீக்குமா மும்பை?

நீக்குமா மும்பை?

அந்த அளவுக்கு இஷான் தனக்கு கொடுத்த பணத்திற்கு நியாயம் செய்யவில்லை.ஆனால் இன்னும் 3 போட்டிகள் இருக்கிறது. தமக்கு கொடுத்த பணம் நியாயமானது தான் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு இஷான் கிஷனுக்கு வந்துள்ளது. இஷான் கிஷனை அடுத்த சீசனில் நீக்கிவிட்டு, பின்னர் அவரை குறைந்த விலையில் மினி ஏலத்தில் எடுக்கலாம் என்று மும்பை அணி திட்டமிட்டுள்ளது.

தெளிந்த இஷான்

தெளிந்த இஷான்

இதனிடையே, தனது பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஷான் கிஷன், எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்து நான் குழம்பிவிட்டேன். நான் போட்டியை வெற்றிக்கரமாக முடிக்க வேண்டும் என்ற நினைப்பில் முதலில் மெதுவாக ஆடி பிறகு ஆட்டமிழந்துவிடுகிறேன். ஆனால் அணி நிர்வாகம் என்னை அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுக்க சொல்கிறது. இனி வரும் போட்டியில் அதை செய்வேன் என்றார்.) இதை கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சி விளையாடிஇருக்கலாமே இஷான்)

Story first published: Thursday, May 12, 2022, 19:46 [IST]
Other articles published on May 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+