Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை அணியின் பெரிய மைனஸ்.. எதிரணிக்கு வைத்திருக்கும் ஆச்சரியம்.. பலன் தருமா ரோகித் முடிவு

மும்பை: ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை, பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

இந்த நிலையில், மெகா ஏலம் காரணமாக மும்பை அணியின் அஸ்திவாரமே ஆடி போகும் அளவுக்கு முக்கிய வீரர்கள் விலகினர்.

இருப்பினும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மும்பை அணி சில நல்ல வீரர்களை தேர்வு செய்துள்ளனர். ஆனால், இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் குறை என்ன, நிறை என்ன என்பதை தற்போது காணலாம்.

பலம்

பலம்

மும்பை அணியின் பலமாக பார்க்கப்படுவது, அதன் கேப்டனும், சில முக்கிய வீரர்களும் தான். ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பொலார்ட்,இஷான் கிஷன், பும்ரா ஆகியோர் தான். இந்த சீசனில் மும்பை அணியின் வெற்றி பெரும்பாலும் இவர்களை சுற்றியே இருக்கும். இதில் யாராவது ஒருவர் சொதப்பினாலும் மும்பை அணிக்கு கஷ்டம் தான்.

பலவீனம்

பலவீனம்

மும்பை அணியின் பலவீனமே, ஹர்திக் பாண்டியா , குர்னல் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர் இல்லாதது தான். ஒரு காலத்தில் மும்பை அணியின் 8 அல்லது 9வது வீரர் கூட பேட்டிங்கில் கலக்கி வெற்றி பெற்று தந்துள்ளார். ஆனால் இம்முறை நிலைமை அப்படி அல்ல. மும்பை அணியின் பேட்டிங் எப்படி கூட்டி பார்த்தாலும் 7வது நபருக்கு மேல் இல்லை. ஒரு வேலை டேனியல் சாம்ஸ், பெபியன் ஆலன் ஆகியோரை கீழ் வரிசையில் மும்பை அணி பயன்படுத்தலாம்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

மும்பை அணியின் மற்றொரு பலவீனம் ஒரு நல்ல சுழற்பந்துவீச்சாளர் இல்லை என்பது தான். மார்க்கண்டே, முருகன் அஸ்வின், சஞ்சய் யாதவ் ஆகியோர் இருந்தாலும், எதிரணிக்கு பயம் தரும் அளவுக்கு ஒரு வீரர்இல்லை. இதே போன்று, பும்ராவுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பாசில் தம்பி மற்றும் உனாட்கட் ஆகியோர் மட்டுமே உள்ளனர். அதனால் அதுவும் ஒரு மைனசாக பார்க்கப்படுகிறது.

ஆயுதம்

ஆயுதம்

மற்ற அணிக்கு மும்பை விளைவிக்கும் ஆபத்தாக பார்க்கப்படுவது, டிம் டேவிட் மற்றும் டிவால்ட் பிரவீஸ் தான். இருவருமே அதிரடியாக ஆடக் கூடியவர்கள். இதில் இருவரும் தங்களது வழக்கமான அதிரடியை காட்டினால் மும்பையை சமாளிப்பது மிகவும் கடினம். இவர்களை நம்பி தான் மும்பையின் எதிர்காலம் உள்ளது. குயின்டன் டி காக் இல்லாததால் இனி அதிரடி தொடக்கத்தை இஷான் கிஷன் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் அவர் தருவாரா- விடை 27ஆம் தேதி தெரிந்துவிடும்.

Story first published: Friday, March 18, 2022, 19:18 [IST]
Other articles published on Mar 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+