Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டினா என்னன்னு பாப்பீங்க.. ஐபிஎல் இன்றைய போட்டி.. மும்பை vs டெல்லி.. அப்படி என்ன ஸ்பெஷல்!!

மும்பை: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன.

15வது ஐபிஎல் சீசன் தொடர் நேற்று சிஎஸ்கே - கொல்கத்தா அணிகளின் மோதலுடன் தொடங்கியது.

இப்போட்டியில் தோனி அரைசதம், சிஎஸ்கேவின் தோல்வி என பல சுவாரஸ்யங்களுடன் நடந்து முடிந்தது.

இன்றைய ஐபிஎல் போட்டி

இன்றைய ஐபிஎல் போட்டி

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் "அதுக்கும் மேல்" என்பது போன்ற விறுவிறுப்பு உள்ளது. மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. நேற்றைய போட்டியிலாவது சிஎஸ்கே தான் வெல்லும் என கணிப்பு இருந்தது. ஆனால் இன்று மும்பை - டெல்லி என இரு அணிகளுமே சரிசமமான பலத்துடன் உள்ளன.

மும்பையில் நிலைமை

மும்பையில் நிலைமை

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை பல வீரர்களை தவறவிடுகிறது. ஹர்திக் பாண்ட்யா, டிகாக், க்ருணால் பாண்ட்யா, ட்ரெண்ட் போல்ட் என அணியின் தூண்களை இழந்துள்ளது. மிடில் ஆர்டரின் பலமாக இருந்த சூர்யகுமார் யாதவும் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சரும் விலகிவிட்டார். இதனால் பேட்டிங் மற்றும் பவுலிங் பெரும் மாற்றங்களை கையாள வேண்டிய சூழலில் ரோகித் சர்மா உள்ளார்.

டெல்லியின் பரிதாபம்

டெல்லியின் பரிதாபம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் இதே சூழல் தான். ஆனால் புதிதாக அமைந்த அணியும் பண்ட்-ஐ கைவிட்டது. அந்த அணியில் மொத்தமுள்ள 7 அயல்நாட்டு வீரர்களில் 5 பேர் இன்னும் மும்பைக்கு வரவில்லை. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், லுங்கி இங்கிடி, ஆன்ரிக் நார்ட்ஜே, முஸ்திவிசூர் ரஹ்மான் என முக்கிய வீரர்கள் தான் அவர்கள். டெல்லி அணியின் முதல் 5 போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முன்னணி இந்திய வீரர்களும் இல்லாமல் தவிக்கிறது.

Recommended Video

PBKS vs RCB: Punjab Kings Beat RCB By Five Wickets In A High Scoring Encounter | Oneindia Tamil
ரசிகர்களுக்கான விருந்து

ரசிகர்களுக்கான விருந்து

ஒருபுறம் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுக்கொடுத்த சீனியர் வீரர் ரோகித் சர்மா இருக்கிறார். மற்றொருபுறம் இந்தியாவின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் ரிஷப் பண்ட், தனது இளம் சிந்தனைகளை விதைக்கவுள்ளார். இவர்களின் மோதல் இன்று ரசிகர்களுக்கு விருந்து படைக்கலாம்.

Story first published: Sunday, March 27, 2022, 15:00 [IST]
Other articles published on Mar 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+